மேலும் அறிய

Anaivarukkum IITM: அரசுப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஐஐடிஎம்; முதல்வர் தொடங்கிவைத்த திட்டத்தின் அம்சங்கள் என்ன?

அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம்.(IITM) திட்டத்தின்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 250 அரசுப் பள்ளிகளுக்கு மின்னணு செய்முறை பெட்டகங்களை வழங்கினார்.

அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம். (IITM) திட்டத்தின்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 250 அரசுப் பள்ளிகளுக்கு மின்னணு செய்முறை பெட்டகங்களை வழங்கினார். இந்தத் திட்டத்தின்மூலம் 1 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் மின்னணு அறிவியலுடன் இணைக்கப்படுவர்.

அனைவருக்கும்‌ ஐஐடிஎம் திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மின்னணு செய்முறை பெட்டகங்கள் வழங்கும் நிகழ்வில்  தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்‌. சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள டி.டி.ஜெகன்னாதன்‌ அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது.

என்ன சிறப்பம்சங்கள்?

நம்‌ நாட்டின்‌ தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில்‌ முதன்மை நிறுவனமான சென்னை ஐஐடியை, கிராமப்புற மாணவர்கள்‌ உட்பட அனைத்து மாணவர்களுக்கும்‌ கொண்டு சேர்க்கும்‌ முயற்சியாக உருவாக்கப்பட்ட திட்டம் அனைவருக்கும்‌ ஐஐடிஎம். 

சென்னை ஐஐடி வாயிலாக 250 அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளைச்‌ சேர்ந்த 500 அறிவியல்‌ ஆசிரியர்களுக்குப்‌ பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அவர்கள்‌ வாயிலாக 1 லட்சம்‌ மாணவர்களுக்குக் கற்பித்தல் கடத்தப்படும். இதற்குப் பயன்‌ தரும்‌ வகையில்‌ மின்னணு செய்முறைப் பெட்டகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனை சம்பந்தப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஸ்டாலின் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ''எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில், அனைத்து மாணவர்களுக்கும் சமத்துவமான கல்வி வழங்குவதுதான் திராவிட மாடல் ஆட்சி. 

ஐஐடி சென்னையில் பிஎஸ் தரவு அறிவியல் படிக்க, தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 87 மாணவர்களில் 45 பேர் அரசு, மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள்'' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்‌, பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஸ்‌ பொய்யாமொழி, சென்னை ஐஐடியின்‌ இயக்குநர்‌ முனைவர்‌ வீ.காமகோடி, பள்ளிக்‌ கல்வித்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ காகர்லா உஷா இ.ஆ.ப., ஐஐடி பேராசிரியர்கள்‌, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்‌, மாணவர்கள்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்‌.

இந்த நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை மாதாமாதம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். 

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், ''எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில், அனைத்து மாணவர்களுக்கும் சமத்துவமான கல்வியை வழங்குவதுதான் திராவிட மாடல் ஆட்சி. ஐஐடி சென்னையில் பிஎஸ் தரவு அறிவியல் படிக்க, தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 87 மாணவர்களில் 45 பேர் அரசு, மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள்.

திறனறிவுத் திட்டம் மூலம் மாதாமாதம் 1000 ரூபாய்

10ஆம் வகுப்புப் படிக்கும் 500 மாணவர்கள், 500 மாணவிகள் என 1000 மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறிவுத் திட்டத்தின்கீழ் உதவித் தொகை வழங்கப்படும். அவர்கள் இளநிலை மற்றும் முதுநிலை கல்லூரிப் படிப்பைத் தொடரும்போதும் மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது’’ என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
Gold Rate Nov. 19th: ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
Embed widget