மேலும் அறிய

இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டங்களை உடனடியாகக் கைவிடுக: அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் குழு வலியுறுத்தல்

இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம் போன்ற முறைசாரா கல்வித் திட்டங்களை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் குழுவின் தமிழ்நாடு குழு தெரிவித்துள்ளது. 

இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம் போன்ற முறைசாரா கல்வித் திட்டங்களை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் குழுவின் தமிழ்நாடு குழு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் குழுவின் தமிழ்நாடு குழுவின் மாநிலக் குழு உறுப்பினர் வெ.சுதாகர் வெளியிட்ட அறிக்கை:

‘‘அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையிலே லட்சக்கணக்கான மாணவர்கள் அங்கு பயின்று வருகின்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும், ஆசிரியர்கள் கற்பித்தல் அல்லாத பல்வேறு பணிகளில் ஆண்டு முழுவதும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஏற்கனவே தமிழகம் முழுவதும் ஆசிரியர் பற்றாக்குறையால் பல்வேறு பள்ளிகள் தத்தளித்து வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை செய்ய முடியாத அளவிற்கு, வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு ஏற்கனவே இருந்து வரும் கற்றல் இடைவெளி கூடுதலாகி, பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது.

உதாரணமாக, வருவாய்த் துறைக்குக் கீழே வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) பணி, வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து அவர்களது ஆதார் எண் விவரங்களைச் சேகரித்து வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைத்தல் பணி, ஆண்டு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டை பெறுவோருக்கான புதிய சேர்க்கை, நீக்கல், இடம் மாறியவர்களுக்கு மாற்றிக் கொடுத்தல் போன்ற பல பணிகளை, கற்பித்தல் பணிகளை மட்டுமே செய்ய வேண்டிய ஆசிரியர்களுக்குத் தருகின்றனர்.

கற்பித்தல் தாண்டி ஏராளமான பணிகள்

பள்ளிக்குள்ளேயே 'எமிஸ்' (Education Management Information System - EMIS) என்று அழைக்கப்படும் கல்வி தகவல் அளிக்கும் முறையினால் மாணவர்களின் கல்வி குறித்த 32 விதமான தகவல்களை சேகரித்து அவற்றை கணினியில் ஏற்றும் பணியும் ஆசிரியர்கள் மீதே சுமத்தப்படுகிறது.

ஆண்டு முழுவதும் பல காலங்களில் கல்விப் பயிற்சிக்கு செல்லுதல், இலவச பொருட்களை குறிப்பிட்ட இடத்திலிருந்து பள்ளிக்கு எடுத்து வரும் பணி, முதன்மைக்கல்வி அலுவலகம் செல்லும் பணி, அலுவலகத் தபால்கள் குறித்து கணினியில் பதில் தருதல், விவரங்கள் தரும் பணி, பள்ளிகள் குறித்து பல்வேறு பணி என ஏராளமான கற்பித்தல் அல்லாத பணிகளை ஆசிரியர்கள் அன்றாடம் செய்து வருகின்றனர்.

இன்றைய காலச்சூழலில் பள்ளிகளில் குழந்தைகளை உடனிருந்து கவனிக்க வேண்டிய ஆசிரியர்களின் பொன்னான நேரத்தை அதற்கு செலவிட விடாமல், கற்பித்தல் அல்லாத பணிகளைத் தொடர்ந்து கல்வித்துறை ஆசிரியர்கள் மீது திணித்து வருகிறது. இது ஆசிரியர்கள் மீது கடுமையான பணிச்சுமையை ஏற்றுவதோடு அவர்களிடம் மன உளைச்சலையும் ஏற்படுத்தி, கற்பித்தல் பணியையே பாழாக்கி வருகிறது. மேலும் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத சூழலில், பல தவறான பாதையில் மாணவர்கள் பிறழ்ந்து போகும் நிலை அதிகரித்துள்ளது.


இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டங்களை உடனடியாகக் கைவிடுக: அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் குழு வலியுறுத்தல்

முறை சாராக் கல்விக்கு முக்கியத்துவமா?

இதுமட்டுமன்றி ’இல்லம் தேடிக் கல்வி’ என்ற பெயரில் முறை சாராக் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி, முறை சார்ந்த கற்பித்தல், கற்றல் செயல்முறையின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு வருகிறது. இல்லம் தேடி கல்விப் பணிகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்துவது, மேலும் அவர்கள் மீது பணிச் சுமையை ஏற்றுகிறது. இது மட்டுமின்றி ’எண்ணும் எழுத்தும்’ என்ற திட்டத்தின் கீழ் மூன்றாம் வகுப்பில் இருக்கும் மாணவர்களுக்கு எண்களையும் எழுத்துக்களையும் கற்பிக்கிறோம் என்ற பெயரில், கற்றல் செயல்முறை மிகவும் காலம் தாழ்த்தப்படுகிறது. இது மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் சலிப்பையே ஏற்படுத்தி வருகிறது.

இவ்வாறு அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் கற்றல் செயல்முறை போக்கு பெரிதும் பாதிப்படைந்துவிட்டது. மேலும் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம் போன்றவற்றால் அரசுப் பள்ளிகளில் முறைசார்ந்த கல்வி அமைப்பு செயல்பாடு கேள்விக்குறியாகி உள்ளது. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மீது சுமையை ஏற்றுவதும் இல்லம் தேடி கல்வி, ‌எண்ணும் எழுத்தும் திட்டம் போன்றவை அரசுப் பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்களை விரட்டும் திட்டம் ஆகும். இது தேசிய கல்விக் கொள்கை 1986, தேசியக் கல்விக் கொள்கையை 2020 பின்பற்றியே கொண்டுவரப்பட்டுள்ளது.

வேறு எந்தப் பணியிலும் ஈடுபடுத்தக் கூடாது

அரசுப் பள்ளிகளில் கற்பித்தல்- கற்றல் செயல்முறை போக்கை மீண்டும் உயிர்ப்பிக்க, கற்பித்தல் கற்றல் செயல்முறையை தவிர வேறு எந்தப் பணிக்கும் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது. கோடானு கோடி இளைஞர்கள் வேலையின்மை பிரச்சினையில் தவித்து வருகையில் அவர்களுக்கு அந்தப் பணியை வழங்குவதே சரியான தீர்வாகும். 

அதேபோல இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம் போன்ற முறைசாரா கல்வித் திட்டங்களை உடனடியாக கைவிட வேண்டும்.’’ 

இவ்வாறு அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

UPSC: யுபிஎஸ்சி முடிவில் குழப்பம்: ஒரே பெயர், ஒரே ரேங்க்... 301ம் இடம் யாருக்கு? உரிமை கொண்டாடும் இருவர்!
UPSC: யுபிஎஸ்சி முடிவில் குழப்பம்: ஒரே பெயர், ஒரே ரேங்க்... 301ம் இடம் யாருக்கு? உரிமை கொண்டாடும் இருவர்!
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
ஆட்சிக்கு வரும் முன் ஒரு பேச்சு... ஆட்சி முடியும் தருவாயில் வேறு பேச்சு... பகுதிநேர ஆசிரியர்கள் குறித்த தேர்தல் வாக்குறுதியை மடைமாற்றும் திமுக அரசு..
ஆட்சிக்கு வரும் முன் ஒரு பேச்சு... ஆட்சி முடியும் தருவாயில் வேறு பேச்சு... பகுதிநேர ஆசிரியர்கள் குறித்த தேர்தல் வாக்குறுதியை மடைமாற்றும் திமுக அரசு..
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...
”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?
Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MS Dhoni: ”சிரிப்பு நல்லா இருக்குயா” நான் கம்பீர் மாதிரி இல்லை - 2 வருடங்களுக்கு பிறகு தோனி போட்ட பதிவு
MS Dhoni: ”சிரிப்பு நல்லா இருக்குயா” நான் கம்பீர் மாதிரி இல்லை - 2 வருடங்களுக்கு பிறகு தோனி போட்ட பதிவு
TN Roundup: திருச்சியில் திமுக மாநாடு, சென்னையில் இரட்டைக் கொலை, தங்கம் விலை சரிவு -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: திருச்சியில் திமுக மாநாடு, சென்னையில் இரட்டைக் கொலை, தங்கம் விலை சரிவு -தமிழகத்தில் இதுவரை
T20 Worldcup Final: சல்லி சல்லியா நொறுங்கிய சாதனைகள்..! முதல் அணியாக இந்தியா சரித்திரம் - முழு பரிசு விவரங்கள்
T20 Worldcup Final: சல்லி சல்லியா நொறுங்கிய சாதனைகள்..! முதல் அணியாக இந்தியா சரித்திரம் - முழு பரிசு விவரங்கள்
Suryakumar Yadav: ஸ்கேம் செய்த சூர்யகுமார்.. கேப்டன் பதவி தப்புமா? கோலியால முடியல, லெஜண்ட் பட்டம் இருக்கா?
Suryakumar Yadav: ஸ்கேம் செய்த சூர்யகுமார்.. கேப்டன் பதவி தப்புமா? கோலியால முடியல, லெஜண்ட் பட்டம் இருக்கா?
Gautam Gambhir:
Gautam Gambhir: "ரெண்டு பேருக்கு தான் இந்த கப் சொந்தம்" டார்கெட் செய்த கோச், ஜெய் பாய்க்கு நன்றி - கம்பீர் பேச்சு
T20 WC 2026 Champion: சாம்பியன் இந்தியா! 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு! நாடே ஹாப்பி!
T20 WC 2026 Champion: சாம்பியன் இந்தியா! 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு! நாடே ஹாப்பி!
GOLD AND SILVER RATE TODAY : தங்கம் விலை மீண்டும் குறைந்தது.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? வெள்ளி விலை என்ன தெரியுமா.?
தங்கம் விலை மீண்டும் குறைந்தது.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? வெள்ளி விலை என்ன தெரியுமா.?
Beach Wedding : வெறும் 10,000 ரூபாய் இருந்தால் போதும்.! பீச்சில் திருமணம் நடத்த சூப்பர் சான்ஸ்- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
வெறும் 10,000 ரூபாய் இருந்தால் போதும்.! பீச்சில் திருமணம் நடத்த சூப்பர் சான்ஸ்- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Embed widget