மேலும் அறிய

அரசு கலைக் கல்லூரிகளில் 70% ஆசிரியர் பணியிடம் காலி: கல்வித்தரம் எப்படி உயரும்?- ராமதாஸ் கேள்வி

அரசு கலைக் கல்லூரிகளில் 70% ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளபோது கல்வித்தரம் எப்படி உயரும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு கலைக் கல்லூரிகளில் 70% ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளபோது கல்வித்தரம் எப்படி உயரும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவ்வளவு காலிப்பணியிடங்களை வைத்துக் கொண்டு மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க முடியாது என்பதை அறிந்திருந்தும்  உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது.

தமிழ்நாட்டில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தொடக்கம் முதலே அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு  வரும் 163 கல்லூரிகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்கள் பயின்று வருகின்றனர். நடப்பாண்டில் முதலாமாண்டில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்களை சேர்க்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 10,079 ஆகும். இவற்றில் சுமார் 7,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக  உள்ளன. இது ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் ஏறத்தாழ 70 விழுக்காடு ஆகும்.

70% இடங்கள் காலி

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கடந்த பல ஆண்டுகளாகவே மாணவர் சேர்க்கை அனுமதிக்கப்பட்டதை விட 20-25% அதிகமாக நடத்தப்படுகிறது. கூடுதலாக மாணவர்கள் சேர்க்கப்படும் நிலையில், அதற்கு இணையாக கூடுதல் ஆசிரியர்களும் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், ஒப்புதல் அளிக்கப்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்களிலேயே கிட்டத்தட்ட 70% இடங்கள் காலியாக இருக்கும் போது, அரசு கலைக் கல்லூரிகளின் மாணவர்களுக்கு தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?

அரசு கல்லூரிகளில் நிலைமையை சமாளிப்பதற்காக 4,084 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். ஆனால், மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் அவர்களை மட்டும் கொண்டு அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க முடியாது. உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரந்தரமாக நிரப்பப்பட்டால் மட்டும்தான் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க முடியும். ஆனால், அதற்காக நடவடிக்கைகள் கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படவே இல்லை.

2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 3,500 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதற்கு பிறகு வந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 28.05.2013-ஆம் தேதியிட்ட அறிவிக்கையின்படி 1,093 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்பின் 10 ஆண்டுகள்  ஆகி விட்ட நிலையில், அரசு கல்லூரிகளுக்கு ஒரு உதவி பேராசிரியர் கூட புதிதாக நியமிக்கப்படவில்லை.

புதிய விரிவுரையாளர்கள் நியமிக்கப்படவில்லை

2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 2,331 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது; அதேபோல், கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கும் நோக்குடன், 2021 பிப்ரவரி 15,16,17,18 ஆகிய நாட்களில் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது; ஆனால், இரு நடைமுறைகளும் பாதியில் நிறுத்தப்பட்டதால் புதிய விரிவுரையாளர்கள் நியமிக்கப்படவில்லை.

முந்தைய ஆட்சியில்  2011- 2016 காலத்தில் 953 புதியப் பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டன. 2016-க்குப் பிறகு இன்று வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதியப் பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டன. புதிய பாடங்களை நடத்துவதற்காக மட்டும் 3,000-க்கும் மேற்பட்ட புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. இவை தவிர சுமார் 4000 பேர் ஓய்வு பெற்றதையும் சேர்த்துதான் காலியிடங்களின் எண்ணிக்கை 7,000-ஐ கடந்துள்ளது. இவ்வளவு காலியிடங்களுடன் கல்லூரிகளை நடத்துவது கல்வித்தரத்தை சீரழித்து விடும்.

அரசு கல்லூரிகளின் நிலைமை இப்படி என்றால், அரசு உதவி பெறும் கல்லூரிகளின் நிலையும் மோசமாக உள்ளது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மொத்தமுள்ள 10,610 ஆசிரியர் பணியிடங்களில் சுமார்  3,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப கல்லூரி நிர்வாகங்கள் தயாராக இருந்தும், அதற்கு தமிழக அரசின் உயர் கல்வித்துறை ஒப்புதல் வழங்கவில்லை. அதற்கான காரணம் புரியவில்லை.

உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தில் 51.40 விழுக்காட்டுடன் தமிழகம் முதலிடத்தில் இருப்பது உண்மை. ஆனால், இந்தப் பெருமை மட்டுமே போதாது. அரசு கல்லூரிகளின் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட வேண்டும். இதற்கு வசதியாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை - அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணி  இடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். அவ்வாறு நிரப்பும் போது 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும், தகுதியுள்ள கவுரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்’’. 

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

"எங்கள் வாழ்நாளைப் பள்ளிக்கே தந்துவிட்டோம்!" - அமைச்சரிடம் மனு அளித்து கதறிய பகுதிநேர ஆசிரியர்கள்!
கலெக்டரோட ஒரு கப் 'காபி'... அரசுப் பள்ளி மாணவர்களின் கனவுகளுக்குக் கிடைத்த 'சூப்பர்' சிறகுகள்!
கலெக்டரோட ஒரு கப் 'காபி'... அரசுப் பள்ளி மாணவர்களின் கனவுகளுக்குக் கிடைத்த 'சூப்பர்' சிறகுகள்!
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Embed widget