மேலும் அறிய

Evening Special Classes: 10, 12-ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பொதுத்‌தேர்வில்‌ தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ம்மாலை நேர சிறப்பு வகுப்புகள்‌ பள்ளியில்‌ நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

10-ஆம்‌ வகுப்பு மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு அரசு பொதுத்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் துணைத் தேர்வுகள்‌ நடைபெற உள்ளன. இவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள்‌ பள்ளியில்‌ நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளின் தேர்ச்சி விகிதத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். 2021- 22ஆம் கல்வி ஆன்டில் 10ம் வகுப்பில் மொத்தம் 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 மாணவர்கள் தேர்வெழுதினர். 

இதில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது 90.07 சதவீதம் மாணவர்கள் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4 லட்சத்து 27 ஆயிரத்து 73 பேர் தேர்ச்சி அடைந்தனர். மாணவர்கள் 3 லட்சத்து 94 ஆயிரத்து 920 பேர் அடைந்துள்ளனர். அதாவது 85.83 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

12-ஆம் வகுப்பில் 93.76% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவிகள் 96.32% பேரும், மாணவர்கள் 90.96% பேரும் தேர்ச்சி அடைந்தனர். தேர்வடையாத மாணவர்களுக்கு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் துணைத் தேர்வுகள்‌ நடைபெற உள்ளன. இவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள்‌ பள்ளியில்‌ நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Evening Special Classes: 10, 12-ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

அதில், ’’2021-2022 ஆம்‌ கல்வியாண்டில்‌ 10 ஆம்‌ வகுப்பு மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பிற்கான மாணவர்களுக்கு அரசு பொது தேர்வு கடந்த மே 2022 மாதத்தில்‌ நடைபெற்றது. மேற்கண்ட 10 ஆம்‌ வகுப்பு மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு அரசு பொதுத்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 25.07.2022 முதல்‌ 08.08.2022 முடிய துணைத் தேர்வுகள்‌ நடைபெற உள்ளன. 

இந்த துணைத்தேர்வில்‌ தேர்ச்சி அடையும்‌ பொருட்டு சார்ந்த பாட ஆசிரியர்கள்‌ தேர்வு முடியும்‌ வரை தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பயின்ற பள்ளியில்‌ மாலை நேர சிறப்பு வகுப்புகள்‌ நடத்தி தேர்வில்‌ பங்கு பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திடுமாறு அனைத்து தலைமையாசிரியர்களுக்கும்‌ தெரிவிக்குமாறு மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.‌

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget