கரூர்: கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு சென்ற மனைவி: கணவர் எடுத்த விபரீத முடிவு! நடந்தது என்ன?
இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று குடித்துவிட்டு பாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
![கரூர்: கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு சென்ற மனைவி: கணவர் எடுத்த விபரீத முடிவு! நடந்தது என்ன? Youth committed suicide by hanging near Karur. கரூர்: கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு சென்ற மனைவி: கணவர் எடுத்த விபரீத முடிவு! நடந்தது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/13/1d2720caeadd0023c9496c2d50e92e261678699174618183_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூர் அருகே மனைவி கோபித்து சென்றதால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அருகே மனைவி கோபித்துச் சென்றதால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, ”கரூர் அருகே உள்ள பசுபதிபாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், பெயிண்டர். இவருக்கு திருமணம் ஆகி விஜயலட்சுமி என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக தெரிகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று குடித்துவிட்டு பாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
விஜயலட்சுமி தனது குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மணமுடிந்து காணப்பட்ட பாலகிருஷ்ணன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பின்னர் பாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனம் மோதி செக்யூரிட்டி பலி
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வேலன் செட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். தனியார் நிறுவன செக்யூரிட்டி ஊழியர். இவர் கடந்த பத்தாம் தேதி மாலை அரவக்குறிச்சி அருகே ஆண்டிப்பட்டி கோட்டை பகுதியில் பஜாஜ் பிளாட்டினா டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் டூவீலர் மீது மோதியது. இதில் தலையில் காயமடைந்த நாகராஜன், அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து அரவாக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)