மேலும் அறிய

Wife Kill Husband: தகாத உறவு - வழிகாட்டிய அம்மா..! கணவனை போட்டு தள்ளிய மனைவி - ஷாக்கான காவல்துறை

Wife Kill Husband: தாயின் உதவியோடு மனைவியே கணவனை கைது செய்த சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Wife Kill Husband: கணவனை கொலை செய்ததாக மனைவி மற்றும் அவரது தாயார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கணவனை கொலை செய்த மனைவி

பெங்களூருவில் கடந்த வாரம் 37 வயதான ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர், திருமணத்தை மீறி பல பெண்களுடன் உறவை வைத்திருந்தது மற்றும் சட்டவிரோத வணிக பரிவர்த்தனைகள் காரணமாக அவரது மனைவி மற்றும் மாமியாரால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது, என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.  குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குற்றவாளிகள் கைது

சிக்கபனாவராவில் வெறிச்சோடிய பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த காரில், இறந்த நிலையில் ஒரு உடல் இருப்பதை கண்டு பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விசாரணையில் அது லோக்நாத் சிங் எனும் ரியல்-எஸ்டேட் தொழிலதிபர் என்பது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக பேசிய வடக்கு பெங்களூரு துணை காவல் ஆணையர் (டிசிபி) சைதுல் அதாவத் , "சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு 112 என்ற எண்ணில் எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. உடல் குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. குற்றத்திற்காக அவரது மனைவி மற்றும் மாமியாரை நாங்கள் கைது செய்துள்ளோம். மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.

நடந்தது என்ன?

குற்றம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் தனது கணவருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உணவில் தூக்க மாத்திரைகளை கலக்கியிருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் லோக்நாத்தை ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று கத்தியால் அவரது தொண்டையை அறுத்துவிட்டு தப்பிச் சென்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் மற்றும் சட்டவிரோத வணிக பரிவர்த்தனைகள் காரணமாகவும் கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

ரகசிய திருமணம்:

டிசம்பர் மாதம் குனிகலில் தங்கள் திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு, லோக்நாத் தனது மனைவியுடன் இரண்டு வருடங்களாக உறவில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் இருந்ததால் அவரது குடும்பத்தினர் இந்த உறவை எதிர்த்ததால், ரகசிய திருமணம் செய்துள்ளனர். இருவீட்டாருக்கும் திருமணம் குறித்து எதுவும் தெரியாமல் இருந்துள்ளது.

அதன்படி திருமணம் முடிந்த சிறிது நேரத்திலேயே, லோக்நாத் தனது மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றார். இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு இவர்களின் திருமணம் பற்றித் தெரியவந்துள்ளது.

கொலைக்கான திட்டம்

இந்த சூழலில் தான் லோக்நாத்தின் மனைவி மற்றும் மாமியார் குடும்பத்தினர் அவரது திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் மற்றும் சட்டவிரோத வணிக பரிவர்த்தனைகள் பற்றி அறிந்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். 

கணவன் மனைவி தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டதாலும், விவாகரத்து பெறுவது குறித்தும் கூட யோசித்ததாலும் உறவு மோசமடைந்தது. லோக்நாத் தனது மாமனார் மற்றும் மாமியாரை மிரட்டத் தொடங்கியதாகவும், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி மற்றும் மாமியார் சேர்ந்து, லோக்நாத்தை கொல்ல திட்டத்தை வகுத்துள்ளனர். அதன்படி, மனைவி மற்றும் மாமியார் சேர்ந்து கொல்லப்பட்ட லோக்நாத்,  மோசடி வழக்கு தொடர்பாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவின் கண்காணிப்பில்  இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Embed widget