மேலும் அறிய

மாஸ்டர் ப்ளான் போட்டு மூன்று திருமணம் : வடிவேலு பட பாணியில் தெரியவந்த மோசடி..!

எனக்கு யாரும் இல்லை என தெரிவித்து 3 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த சுஹாசினி் என்ற பெண் ஆந்திராப்போலீசாரிடம் வசமாக சிக்கினார்..

ஆந்திராவில் படங்களை மிஞ்சும் அளவிற்கு மாஸ்டர் பிளாn போட்டு 3-வது திருமணம் செய்ததோடு, பணம் நகையினைக் கொள்ளையடித்து சென்ற வழக்கில் சுஹாசினி என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

சினிமாக்களில் தான் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருமணமான ஆண், பெண் யாராக இருந்தாலும் வேறொருவரை ஏமாற்றி திருமணம் செய்வதைப் பார்த்திருப்போம். அப்படியான விஷயங்கள் தற்போது அதிகரித்தும் வருகிறது. அப்படித்தான் ஆந்திர மாநிலம் சித்தூரில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், அடக்கமாகவும் தெரிந்த பெண்களைப் பார்த்தால் அவர்களுடன் நட்பு கொள்ள வேண்டும் என்ற ஆசை பலருக்கும் வருவதுபோல, சித்தூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 26 வயதான சுஹாசினி என்ற பெண்ணுடன், அதே நிறுவனத்தில் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணிபுரிந்த சுனில் நட்புடன் பழகி வந்துள்ளார். நன்றாக போய்க்கொண்டிருந்த நட்பு காதலில் முடிந்து இவர்கள் இருவரும் காதல் வயப்படத்தொடங்கிவிட்டனர்.


மாஸ்டர் ப்ளான் போட்டு மூன்று திருமணம் : வடிவேலு பட பாணியில் தெரியவந்த மோசடி..!

இந்நேரத்தில் தான் எனக்கு யாரும் இல்லை, நான் அனாதை என்று தெரிவித்த நிலையில் தான், சுனில் தனது குடும்பத்தாரிடம் பேசி இருவரும் திருமணம் செய்துள்ளனர். இதனையடுத்துதான் இவர்களது வாழ்வில் பிரச்சனை தொடங்கியது. தன்னுடைய தாய்மாமன் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது எனவே பணம் தேவை என சுனிலின் தந்தையிடம் பெற்றுள்ளார் சுஹாசினி.  இத்தகவலை அறிந்த சுனில், ஏற்கனவே திருமணத்திற்கு முன்பு தான் 2 லட்சம் வாங்கியுள்ள நிலையில், ஏன் தற்பொழுது மீண்டும் பணம் வாங்கியிருக்கிறாய்? என கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் சுஹாசினியால் எந்த பதிலையும் தெரிவிக்க முடியவில்லை. இதனையடுத்து சுனில் வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்று விட்டார்.

இதனையடுத்து அதிர்ச்சியடைந்த சுனில், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போய் இருந்த நிலையில்தான், தன்னிடம் இருந்த சுஹாசினியின் ஆதாரில் உள்ள முகவரிக்கு சென்று விசாரித்துள்ளார். அப்பெண்ணின் வீட்டிற்கு அருகில் இருந்தவர்கள், ஏற்கனவே இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது என கூறியுள்ளனர். தான் ஏமாந்துவிட்டோம் என்று புலம்பிய சுனில் இதுக்குறித்து அலிபிரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஏமாற்றி திருமணம், பண மோசடி போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் போலீசார் தங்களது விசாரணையை தொடங்கினர்.


மாஸ்டர் ப்ளான் போட்டு மூன்று திருமணம் : வடிவேலு பட பாணியில் தெரியவந்த மோசடி..!

போலீசாருக்கு தலைசுற்றும் அளவிற்கு தான் விசாரணையில் தகவல் கிடைத்தது. ஆம், சுஹாசினி என்ற இந்தப்பெண் வினய் என்பவரை ஏற்கனவே திருமணம் செய்துகொண்டதோடு அவரிடம் பணமோசடி செய்ததாக வழக்கு ஒன்று பதிவாகியிருந்தது தெரியவந்தது.

ஒரு மாத காலமாக இப்பெண்ணை போலீசார் தேடிவந்த நிலையில்தான், திருப்பதியில் சிவிம்ஸ் மருத்துவமனை அருகே சுற்றித்திரிந்த சுஹாசினியை போலீசார் கைது செய்துவிசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த 3 பேரை தவிர்த்து வேறு யாராவது சுஹாசினியின் காதல் வலையில் சிக்கி வாழ்க்கையையும், பணத்தையும் இழந்துள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
" மனைவியின் Whats app , instagram சாட் " அதிர்ந்து போன கணவன் !! ஏன் எதற்காக ?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
Embed widget