மேலும் அறிய

Crime: அடங்காத காதல்.. கணவனை கொன்ற மனைவி.. உதவிய முன்னாள், இந்நாள் காதலன்!

சுக்தேவ்கிரியின் அண்ணன் சாந்தகிரியுடன் ஜாக்ருதிக்கு பழக்கம் ஏற்பட்டது நாளடைவில் இது திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. ஒருகட்டத்தில் ஜாக்ருதி தனது கணவரையும் குழந்தைகளையும் கைவிட்டு சென்று விட்டார்.

குஜராத் மாநிலத்தில் கணவரைக் கொலை செய்த வழக்கில் அவரது மனைவியும், கள்ளக்காதலனும் அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்ய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பின்னணியில் ஏகப்பட்ட விஷயங்கள் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. அதனைப் பற்றிக் காணலாம். 

குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு ஜாக்ருதி என்ற பெண்ணும், சுக்தேவ்கிரி கோஸ்வாரி என்ற நபரும் திருமணமாகி வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே சுக்தேவ்கிரியின் அண்ணன் சாந்தகிரியுடன் ஜாக்ருதிக்கு பழக்கம் ஏற்பட்டது நாளடைவில் இது திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. ஒருகட்டத்தில் ஜாக்ருதி தனது கணவரையும் குழந்தைகளையும் கைவிட்டு சாந்திகிரியைத் திருமணம் செய்ய வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 

இருவரும் அருகிலுள்ள மற்றொரு கிராமத்தில் புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். அத்துடன் அந்த பிரச்னை முடியவில்லை. லாரி ஓட்டுநரான சாந்திகிரி, அடிக்கடி வாரக்கணக்கில் வீட்டிலிருந்து வெளியூர் சென்றுவிடுவது வழக்கம். அப்படியாக அவர் இல்லாத நேரத்தில் ஜாக்ருதி பாரத் சபாரியா என  மற்றொரு நபருடன் கள்ளக்காதலில் ஈடுபட தொடங்கியிருக்கிறார். இந்த உறவு மிக தீவிரமாக இருந்த நிலையில் சாந்திகிரி  வேலை விஷயமாக வெளியூர் செல்லும்போதெல்லாம் இந்த ஜோடிக்கு ஒரே குஷியாக இருக்கும் அளவுக்கு பழக்கம் எல்லை மீறி சென்றுள்ளது. இதற்காக பாரத் சபாரியாவை தனது வீட்டுக்கு அருகிலேயே ஜாக்ருதி குடிவைத்துள்ளார். 

இதற்கிடையில் எத்தனை நாளைக்கு தான் நாம் திருட்டுத்தனமாக சந்திக்க வேண்டியது, அதனால் நம் உறவுக்கு தடையாக இருக்கும் சாந்தகிரியை கொலை செய்து விடலாம் என இருவரும் முடிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சாந்திகிரியைக் கொல்வதற்காக ஜாக்ருதி, பாரத் இருவரும் யூனிஸ் என்ற நபரை 25,000 ரூபாய்க்கு பணிக்கு அமர்த்தியுள்ளனர். 

ஒரு நாள் இரவு கொலையைச் செய்யும் நோக்கத்தில் யூனிஸ் ஜாக்ருதிவீட்டிற்குள் நுழைந்தான். ஆனால் சாந்திகிரி தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டதும் தைரியத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது. அவரைக் கொல்வதற்குப் பதிலாக யூனிஸ் யாருக்கும் தெரியாமல் தூங்கிக்கொண்டிருந்த அந்த நபரைப் புகைப்படம் எடுத்து, கொலை நடந்துவிட்டதாகப் பொய்யாகக் கூறி ஜாக்ருதிக்கு அனுப்பியுள்ளான். தன் கணவர் இறந்துவிட்டார் என்று நம்பிய ஜாக்ருதி அவனுக்குப் பணத்தைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

மறுநாள் காலையில் சாந்தகிரி உயிருடன் இருப்பதைக் கண்ட ஜாக்ருதி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். தனது முதல் திட்டம் தோல்வியடைந்ததால் கள்ளக்காதலர்கள் தாங்களே கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர். அதன்படி இதற்காக திட்டமிட்டுள்ளனர். பாரத் சாந்தகிரி கழுத்தை நெறித்துக் கொலை செய்தார். ஜாக்ருதி அவரது முகத்தில் தலையணை வைத்து அழுத்தி திட்டத்தை சாதுரியமாக முடித்துள்ளனர். இதற்கிடையில் சாந்தகிரி உடலை கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துள்ளனர். அந்த உடலை அகற்ற ஏற்கனவே தான் காதலில் இருந்த தீபக்கை ஜாக்ருதி அணுகியுள்ளார். மூவரும் சேர்ந்து சாந்திகிரியின் உடலை சுரேந்திரநகரில் உள்ள ஒரு கால்வாயில் வீசி இதனை ஒரு விபத்து போல சித்தரித்துள்ளனர். 

சாந்திகிரி லாரி ஓட்டுநராக வேலைக்குச் சென்றுவிட்டதாகவும், புதிய வேலை கிடைத்துவிட்டதாகவும், தனது தொலைபேசி எண்ணை மாற்றிவிட்டதாகவும் அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் ஜாக்ருதி சமாளித்து வந்துள்ளார். ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக அகமதாபாத் போலீசில் புகாரளிக்கப்பட்டது. கிட்டதட்ட எட்டு மாதங்களுக்குப் பின் அந்த மர்மம் வெளிப்பட்டுள்ளது. இரண்டு மாத காலம் ரகசிய விசாரணை செய்து ஜாக்ருதி உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

ஒரே ஒரு வார்த்தை..நண்பனின் மனைவியை தப்பாக பேசிய பிளஸ் - 2 மாணவனுக்கு நேர்ந்த சோகம்
ஒரே ஒரு வார்த்தை..நண்பனின் மனைவியை தப்பாக பேசிய பிளஸ் - 2 மாணவனுக்கு நேர்ந்த சோகம்
ஆக்ரா சூட்கேஸ் விவகாரம்: பிரியாணி பாத்திரத்தில் மனிதக் கறி! கூடுவாஞ்சேரி வீட்டில் காத்திருந்த பயங்கரம்!
ஆக்ரா சூட்கேஸ் விவகாரம்: பிரியாணி பாத்திரத்தில் மனிதக் கறி! கூடுவாஞ்சேரி வீட்டில் பயங்கரம்!
டியூசன் மாஸ்டரை கொல்ல திட்டம்... கையில் குண்டு வெடித்து சிதைந்த கை!
டியூசன் மாஸ்டரை கொல்ல திட்டம்... கையில் குண்டு வெடித்து சிதைந்த கை!
சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
Ather Rizta Record Sales: ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
Baleno Facelift Launch: அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
Embed widget