திருப்போரூர் அருகே பயிற்சி விமானம் விபத்து: கருப்பு பெட்டி மீட்பு! விமானியின் சாகசம், அதிர்ச்சி தரும் காரணம்?
"செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நடைபெற்ற விமான விபத்தில் நடந்தது என்ன என்பது குறித்து பார்க்கலாம்"

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது.
விமானம் வெடித்து சிதறி விபத்து
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியில் இந்திய விமானப்படையின் விமானப்படை பயிற்சித் தளம் உள்ளது. இங்கு விமானப்படை வீரர்களுக்கான விமானம் ஓட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தாம்பரம் பயிற்சி விமானத்திலிருந்து நேற்று பிற்பகலில் ‘பிளேட்டஸ் பி.சி.,7 மார்க் II’ ரக பயிற்சி விமானம் புறப்பட்டது.
இதனை கடந்த 25 ஆண்டுகாலம் விமான பயிற்சியாளராக பணியாற்றி வரும் சூழலில் நேற்று பயிற்சி அளிப்பதற்காக விமானி சுபம் மட்டும் சிறிய ரக விமானத்தில் பயணித்துள்ளார். அப்பொழுது மதிய வேளையில் சிறிய ரக விமானத்தில் மின்சாரக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் தந்திரமாக பயணித்த விமானி ஓ.எம் .ஆர் சாலை அடுத்துள்ள திருப்போரூர் பகுதியில் கழிவேலி என்னும் காலி இடத்தை நோக்கி விமானத்தை பயணித்தவாறு, அங்குள்ள உயர்மின் கோபுரங்களை தாண்டிய பிறகு தனது இருக்கையே புஷ் செய்த உடன் இருக்கை சீட்டு மேலே பறந்த நிலையில் பாராசூட் திறக்கப்பட்டது.
விமானியை மீட்ட உள்ளூர் இளைஞர்கள்
சுமார் இரண்டு கிலோமீட்டர் உயரத்தில் பேராஷூட் மூலம் பறந்து சென்று தண்டலம் பகுதியில் பத்திரமாக தரையிறங்கினார். அவரை திருப்போரூர் இளைஞர்கள் மூன்று பேர் முதல் உதவி செய்து தரையில் இறக்கிய விமானியை பாதுகாப்பாக ஹெலிகாப்டர் மூலம் அனுப்பி வைத்தனர்.
விமானி சுபம் விமானத்திலிருந்து வெளியேறிய சில மணி நிமிடத்திலேயே திருப்போரூர் அருகே பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. கடந்த இரண்டு நாட்களாக இந்திய விமானப்படை வீரர்கள் துப்பாக்கி ஏந்திய விமானப்படை வீரர்கள் விடமான வீழ்ந்து நொறுங்க இடத்தை பார்வையிட்டு, அதில் உள்ள கருப்பு பெட்டியை தேடும் பணியில் தீவிரம் காட்டி வந்தனர்.
கருப்பு பெட்டி தேடும் பணி தீவிரம்
இன்று இரண்டாவது நாளாக காலை 7 மணி அளவில் விமானப்படையினர் விபத்து நடந்த இடத்திற்கு வந்து இரண்டு ஜேசிபி இயந்திரம் மற்றும் ட்ரெயின் மூலமாக அவ்விடத்தில் கருப்பு பெட்டியை தூண்டி எடுக்கும் பணியில் தீவிரம் காட்டினர்.
விமானம் நொறுக்கி விபத்துக்குள்ளான இடத்தில் செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், மற்றும் திருப்போரூர் தாசில்தார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்க்ஷ மேலும் விமானப்படை வீரர்களுக்கு தேவையான 2 ஜே.சி.பி இயந்திரம், கிரான் மற்றும் லேபர் எனும் பணியாளர்கள் போன்ற உதவிகளையும் ஏற்பாடு செய்தனர்.
கருப்பு பெட்டி மீட்பு
பின்னர் இந்திய விமானப்படையினர் திருப்போரூர் பகுதியில் விபத்து ஏற்பட்டு வெடித்து நொறுங்கிய இடத்தில் தாம்பரம் விமானப்படை அதிகாரிகள் மீட்புக் குழுவினருடன் விரைந்து வந்து சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு, சுமார் 15 ஆடி ஆழம் சேற்றில் புதைந்து கிடந்த கருப்பு பெட்டி மீட்டனர்.
மேலும் வெடித்து சிதறிய இயந்திரங்கள் மற்றும் உபரி பாகங்களையும் மீட்டெடுத்தனர்.15 அடி ஆழத்தில் அடியில் சிக்கி அமைக்கப்பட்ட கருப்பு பெட்டியை விமானப்படையினர் சென்னை விமானப்படை நிலையத்திற்கு கொண்டு சென்று, அதில் உள்ள தரவுகளை கண்டறிய டெல்லி விமானப்படைக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.





















