Watch Video | பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி 1.29 கோடி மோசடி - மின்வாரிய பொறியாளர் மனைவி கைது
தஞ்சையை சேர்ந்த ஜெயஸ்ரீ, தேவி கரிகாலன், உமாவதி பிரியங்கா உமாவதி லதா மகேஸ் உள்ளிட்ட 18 பேர் மீது வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.
சிவகங்கை அடுத்த தென்னலி வயல் பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி மனைவி விஜயலட்சுமி. இவரது கணவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாட்டில் பணி செய்துவருகிறார். விஜயலட்சுமி கும்பகோணத்தை பூர்விகமாகக் கொண்டவர். இவருக்கு நவபாரதி என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது நவபாரதியின் கணவர் செந்தில்குமார் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பொறியாளராக வேலை செய்து வருகிறார்.
#Abpnadu | தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பொறியாளராக பணிபுரியும் தஞ்சை செந்தில்குமாரும் அவரது மனைவி
— Arunchinna (@iamarunchinna) March 3, 2022
நவபாரதியும் மோசடி புகாரில் சிவகங்கை தென்னலிவயல் விஜயலெட்சுமி தந்த புகாரில் குற்றபிரிவு போலீஸ் நடவடிக்கை @reportervignesh | @f4ac85d322a444e | @thangadurai887 | @Manikandansmk23 pic.twitter.com/tTQ5Xe85XZ
பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை காட்டி ஒரு கோடியே 29 லட்சம் ரூபாய் மோசடி செய்த கணவன் மனைவி கைதான நிலையில் மேலும் தஞ்சையை சேர்ந்த ஜெயஸ்ரீ, தேவி கரிகாலன், உமாவதி பிரியங்கா உமாவதி லதா மகேஸ் உள்ளிட்ட 18 பேர் மீது வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.#Abpnnadu | சிவகங்கை இரட்டிப்பு லாபம் தருவதாக ரூ.1.20 கோடி மோசடி செய்த 18 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது. இதில் மின்பொறியாளர் செந்தில்குமார் 48, அவரது மனைவி நவபாரதி 45, யை மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
— Arunchinna (@iamarunchinna) March 3, 2022
| @reportervignesh | @_poorvaja | @LPRABHAKARANPR3 | . . . pic.twitter.com/FOvUQydBor