மேலும் அறிய
Advertisement
Watch Video| திருட்டு நகையை வாங்க மறுத்த அடகுகடை சேட்டுக்கு அரிவாள் வெட்டு - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
’’இந்த நகை உன்னுடைய நகை என்பதற்கு முறையான ஆதாரம் இருந்தால் கொடுங்கள் அல்லது உங்கள் பகுதியை சேர்ந்த தெரிந்தவர் யாரிடமாவது என்னிடம் பேச சொல்லுங்கள் என தர்மா சேட்டு தெரிவித்துள்ளார்’’
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மாமண்டூர் ஜிஎஸ்டி சாலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கேசாராம் என்பவரது மகன் தர்மாராமன் செட் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக நகை கடை வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் தர்மாராம் சேட் கடையை திறந்தபோது, வடபாதி கிராமம் புதிய காலனி பகுதியை சேர்ந்த சாம்மூர்த்தி என்பவருடைய மகன் சிலம்பரசன் மற்றும் அவருடைய நண்பர் ஒருவர், சந்தேகத்திற்கு இடமான நகை ஒன்று அடகு வைக்க வந்தபோது, தர்மா சேட்டு சந்தேகத்தின் காரணமாக நகை அடகு வைக்க மறுத்துள்ளார்.
இந்த நகை உன்னுடைய நகை என்பதற்கு முறையான ஆதாரம் இருந்தால் கொடுங்கள் அல்லது உங்கள் பகுதியை சேர்ந்த தெரிந்தவர் யாரிடமாவது என்னிடம் பேச சொல்லுங்கள் என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சென்றதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மாலை மீண்டும் ஆத்திரத்துடன், கடைக்கு குடிபோதையில் வந்த சிலம்பரசன் கடைக்குள் புகுந்து தர்ம ராமனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்த தர்மன் சேட்டை மீட்டு அக்கம்பக்கத்தினர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.
CCTV FOOTAGE செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் சந்தேகத்தின் பேரில் தங்க நகையை ,அடகு வைக்க மறுத்த நகை கடை உரிமையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி pic.twitter.com/fwUx4L3ZVr
— Kishore Ravi (@Kishoreamutha) January 20, 2022
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த படாளம் காவல்துறையினர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சியின் ஆதாரத்தை வைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் அதிக பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இதுபோன்ற துணிகர சம்பவம் நடந்திருப்பது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் அடகு கடையில் வைக்கப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion