கூட்டம் கூட்டமாய் வரும் வெளிமாநில கொள்ளையர்கள்... கட்டி வைத்த மக்கள்... விருத்தாசலத்தில் பீதி!
விருத்தாசலத்தில் வீடு புகுந்து திருட முயன்ற வாலிபரை கோயிலில் கட்டி வைத்து கிராம மக்கள் அடித்து உதைத்தனர். தப்பி ஓடிய கொள்ளையர்கள் செல்போனில் மிரட்டியதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
விருத்தாசலம் மணலூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 55). நேற்று இரவு மழை பெய்து கொண்டிருந்த போது கிருஷ்ணமூர்த்தியின் வீட்டு கதவை யாரோ தட்டுவது போன்ற சத்தம் கேட்டது. உடனே கிருஷ்ணமூர்த்தி கதவை திறந்து பார்த்தபோது, 25 வயது மதிக்கத்தக்க 4 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். நீங்கள் யார்?, உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கிருஷ்ணமூர்த்தி கேட்டார். ஆனால் 4 பேருக்கும் தமிழ் தெரியவில்லை. மாறாக அவர்கள் இந்தியில் பேசினர். இதனால் சந்தேகமடைந்த கிருஷ்ணமூர்த்தி, கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை பார்த்ததும் 4 பேரும், அங்கிருந்து ஓடினர். அவர்களை கிராம மக்கள் விரட்டியதில் ஒருவர் மட்டும் சிக்கினார். மற்ற 3 வாலிபர்களும் தப்பி ஓடிவிட்டனர்.
மேலும் படிக்க : ”அரசியலுக்கு போனா பொய் சொல்லணும்” என்ற சிவகார்த்திகேயன்! - அதிர்ச்சியடைந்த உதயநிதி !
பிடிபட்ட வாலிபரை, மாரியம்மன் கோயில் துணியில் கட்டிப்போட்டு அடித்து உதைத்தனர். மேலும் அவரிடம் யார்?, எந்த ஊர்? என்று இந்தியில் ஒருவர் கேட்டார். அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், திருட வந்ததும் தெரிந்தது. அந்த வாலிபர் கஞ்சா போதையில் இருந்ததால் மேற்கொண்டு எதுவும் கூறவில்லை. இதனிடையே அந்த வாலிபரின் சட்டைப்பையில் இருந்த ஒரு தாளில் செல்போன் எண் இருந்தது. அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு கிராமத்தில் இந்தி தெரிந்த ஒருவர் பேசினார்.
எதிர்முனையில் இந்தியில் பேசியவர், அந்த வாலிபரை உடனடியாக விட்டுவிடுங்கள், அவருக்கு ஏதேனும் நடந்தால் உங்களை நாங்கள் சும்மா விட மாட்டோம் என்று மிரட்டினார். இதன் மூலம் எதிர்முனையில் பேசியவர், கிராம மக்களிடம் இருந்து தப்பிச்சென்ற 3 கொள்ளையர்களில் ஒருவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தப்பிச்சென்ற வடமாநில கொள்ளையர்களால் கிராமத்தில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுமோ? என்ற அச்சத்தில் கிராம மக்கள் உள்ளனர். இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து வாலிபரை மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க : Watch Video : பார்வை கற்பூர தீபமா..! நாதஸ்வரத்திலே வாசித்து அசத்திய கிராமிய கலைஞர்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்