Tindivanam: கள்ள சந்தையில் முட்டை விற்பனை - அங்கன்வாடி மைய பொறுப்பாளர் சஸ்பெண்ட்
குழந்தைகளுக்கு முறையாக கொடுக்காமல் கள்ளத்தனமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் போது அந்தப் பகுதியில் உள்ள நபர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அரசு சார்பாக குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்து மாவு மற்றும் முட்டைகளை கள்ள சந்தையில் விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அங்கன்வாடி மைய பொறுப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சலவாதி ஊராட்சிக்குட்பட்ட மின் நகரில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்திற்கு 25 குழந்தைகள் வந்து செல்கிறார்கள். அங்கன்வாடி பணியாளர் மற்றும் சமையலராக சிங்கனூர் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர் பணிபுரிந்து வருகிறார். தமிழக அரசு சார்பாக இலவசமாக வழங்கப்படும் சத்துமாவு மற்றும் முட்டைகளை குழந்தைகளுக்கு முறையாக வழங்காமல் சத்துமாவு மற்றும் முட்டைகளை பதுக்கி வைத்து சத்துமாவு பாக்கெட் ஒரு கிலோ 25 ரூபாயும் ஒரு மூட்டை 300 ரூபாயும் மற்றும் முட்டை சில்லறையாகவும் மொத்தமாகவும் 1 முட்டை மூன்று ரூபாய்க்கும் 30 முட்டை 90 ரூபாய்க்கும் கள்ளச் சந்தையில் விற்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு முறையாக கொடுக்காமல் கள்ளத்தனமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் போது அந்தப் பகுதியில் உள்ள நபர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி துறை திட்ட அலுவலர் அன்பழகி பரிந்துரையின் பேரில் சலவாதி அங்கன்வாடி மைய பொறுப்பாளர் மகேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டார். மேலும் மகேஸ்வரி மீது துறை ரீதியாக விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்