மேலும் அறிய

‘பட்டாவ என் பேருக்கு எழுதிக்கொடு' - திமுக மாவட்ட கவுன்சிலர் மீது டீ கடைக்காரர் புகார்..!

நிலத்தை தனக்கு எழுதிக்கொடுக்கும் படி திமுக மாவட்ட கவுன்சிலர் ஜெயச்சந்திரன் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பாதிக்கப்பட்ட கனகராசு தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் அருகே பட்டா மாற்றம் செய்ய நீதிமன்றம் வரை சென்றவருக்கு பட்டா கிடைக்கவிடாமல், நிலத்தை தனது பெயருக்கு எழுதி தரும்படி, திமுக மாவட்ட கவுன்சிலர் ஜெயச்சந்திரன் என்பவர் நிலத்தின் உரிமையாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டத்திற்குட்பட்ட தென்னமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் கனகராசு. இவர் அதே ஊரை சேர்ந்த பட்டாம்மாள் என்பவரிடம் கடந்த 1983ம் ஆண்டு 36 செண்ட் நிலத்தை கிரையம் பெற்றுள்ளார். மேலும், அந்த இடத்தில் 25 ஆண்டுகளாக டீ கடை வைத்தும், வசித்தும் வருகிறார். மேலும், இந்த நிலத்திற்கு பட்டா பெறும் முயற்சியிலும் கனகராசு ஈடுபட்டு வருகிறார்.

‘பட்டாவ என் பேருக்கு எழுதிக்கொடு' - திமுக மாவட்ட கவுன்சிலர் மீது டீ கடைக்காரர் புகார்..!

ஆனால், திமுக மாவட்ட கவுன்சிலர் ஜெயச்சந்திரன் என்பவர் அவரது ஆதரவாளர்களுடன் அந்த நிலத்திற்கு பட்டா வழங்க விடாமல், அதிகாரிகளோடு கைக்கோர்த்து தங்களை அலைக்கழிப்பதாக கூறி நீதிமன்றத்தை நாடியுள்ளார் கனகராஜ். அவர் தாக்கல் செய்துள்ள ரிட் மனு மீது விசாரணை மேற்கொண்டு 12 வாரங்களுக்குள் பட்டா வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த திமுக மாவட்ட கவுன்சிலர் ஜெயச்சந்திரன் தனது ஆதரவாளர்களோடு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் விக்கிரவாண்டி வட்டாச்சியர் இளவரசன் ஆகியோருடன் சென்று ஜே.சி.பி இயந்திரத்தை கொண்டு கனகராஜின் கடையை இடிக்க முயன்றுள்ளார். இதனை தடுத்த கனகராஜ் குடும்பத்தாரை ஜெயச்சந்திரன் தரப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

‘பட்டாவ என் பேருக்கு எழுதிக்கொடு' - திமுக மாவட்ட கவுன்சிலர் மீது டீ கடைக்காரர் புகார்..!

இந்த நிலையில், பட்டா வழங்க நீதிமன்றம் ஆணையிட்டும் பட்டா வழங்காமல் கிராம நிர்வாக அலுவலர், வட்டாச்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஜெயச்சந்திரனுக்கு சாதமாக நடந்துக்கொள்வதாகவும், நிலத்தை தனக்கு எழுதிக்கொடுக்கும் படி திமுக மாவட்ட கவுன்சிலர் ஜெயச்சந்திரன் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பாதிக்கப்பட்ட கனகராசு தெரிவித்துள்ளார். மேலும், தங்களுடைய வாழ்வாதாரமான கடையை அபகரிக்கும் முனைப்போடு ஜெயச்சந்திரன் அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், தங்களுக்கான நிலத்திற்கு நீதிமன்ற ஆணைப்படி உரிய விசாரணை மேற்கொண்டு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியும் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் குடும்பத்துடன் மனு அளித்தனர்.

மது போதை....குடும்ப பிரச்னை - அடுத்தடுத்து தந்தை, மகன் தற்கொலை... நடந்து என்ன ?

Anbil Mahesh Speech : அறிவாலயத்தில் இருப்பது போல் உணர்கிறேன் - அன்பில் மகேஷின் அசத்தல் பேச்சு

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Embed widget