Villupuram: மூட்டை மூட்டையாக நெல் கொடுத்த விவசாயிகள்.. வாங்கிவிட்டு காசு தராத ஆசாமி கைது..!
விழுப்புரம்: நெல் மூட்டைகளை பெற்று மோசடி செய்து 10 லட்சத்து 75 ஆயிரம் ஏமாற்றிய ஜீன செல்வத்தை மோசடி வழக்கில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்: விழுப்புரத்தில் விவசாயிகளிடமிருந்து பத்து லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான நெல் மூட்டைகள் பெற்று பணம் தராமல் மோசடி செய்த நெல் வியாபாரியை விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியிலுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் வியாபாரியாக விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் பணி மேற்கொள்வதாக கூறி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை அப்பம்பட்டு பகுதியிலுள்ள விவசாயிகளிடமிருந்து திருவண்ணாமலை மாவட்டம் சேவூர் கிராமத்தை சார்ந்த ஜீனசெல்வம் என்பவர் 733 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்துள்ளார்.
அதன் பின்னர் நெல் மூட்டைகளுக்கான 10 லட்சத்து 75 ஆயிரம் தொகையை விவசாயிகளிடம் தருவதாக கூறி பல நாட்களாக இழுத்தடித்து ஜீன செல்வம் வந்துள்ளார். நெல் மூட்டைகள் கொள்முதல் செய்த தொகையை 4 ஆண்டுகளாக தராமல் ஜீனசெல்வம் மோசடி செய்வது தெரியவரவே பாதிக்கப்பட்ட விழுப்புரத்தை சார்ந்த குமார் என்ற விவசாயி நெல் மூட்டைகளுக்கான பணத்தை மீட்டு தரும்படி விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்தனர். விசாரனையில் நெல் மூட்டைகளை பெற்று மோசடி செய்து 10 லட்சத்து 75 ஆயிரம் ஏமாற்றிய ஜீன செல்வத்தை மோசடி வழக்கில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்