மேலும் அறிய

திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்புணர்ச்சி: வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை - விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

விழுப்புரம் அருகே காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, இளம்பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, இளம்பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து விழுப்புரம் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.


விழுப்புரம் மாவட்டம், சிறுவாளை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். தனக்குச் சாதகமாக அந்தப் பெண்ணிடம் "உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்" என ஆசை வார்த்தைகளைக் கூறி, அவரைப் பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த இளம்பெண் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு பாலாஜியிடம் கேட்டபோது, அவர் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றியுள்ளார்.

போலீசார் நடவடிக்கை மற்றும் கைது:

பாலாஜியால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட இளம்பெண், கடந்த 2018-ஆம் ஆண்டு விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், மகளிர் காவல் நிலைய போலீசார் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நீதிமன்ற விசாரணை மற்றும் தீர்ப்பு:

இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் (மகளிர் நீதிமன்றம்) கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. வழக்கின் அனைத்துத் தரப்பு சாட்சிகளிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு, இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.

வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி இன்று இறுதித் தீர்ப்பை வழங்கினார். அதில், இளம்பெண்ணை ஏமாற்றிப் பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி பாலாஜிக்கு: 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, 5,000/- (ஐந்தாயிரம் ரூபாய்) அபராதம் விதித்து உத்தரவிட்டார். நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, குற்றவாளி பாலாஜி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். காதல் என்ற பெயரில் பெண்ணை ஏமாற்றிய நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget