வாகன சோதனையில் போலீசார் மீது பைக் மோதி விபத்து - சாராய வியாபாரி கைது
விழுப்புரம் : திண்டிவனம் அருகே போலீசார் மீது பைக் மோதி விபத்து ஏற்படுத்திய சாராய வியாபாரி கைது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தீவனூர் பகுதியில், இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் சாராயம் கடத்தி செல்வதாக ரோசனை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஆய்வாளர் அன்னக்கொடி, உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், தலைமை காவலர் வெற்றி மற்றும் அறிவுமணி உள்ளிட்ட போலீசார் தீவனூர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சாராயம் கடத்தி வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். அப்போது பைக்கில் வந்த இருவர் போலீசார் மீது பைக்கை ஏற்றி விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிக்க முயன்றனர். அப்போது ஒருவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
இந்த விபத்தில் தலைமை காவலர் வெற்றி என்பவரது தாடையில் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்த போலீசார் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தாடையில் 7 தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் விசாரணையில் ரெட்டணை பகுதியைச் சேர்ந்த லோகு மகன் தேவா(28) என்பதும், இவர் பைக்கில் சாராயம் கடத்தி சென்ற தீவனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்வதும் தெரியவந்தது. அவரிடமிருந்து 60 லிட்டர் சாராயம் மற்றும் பைக் பறிமுதல் செய்த போலீசார், தேவா மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்