மேலும் அறிய

பிறந்தநாளன்று தம்பியை கொலை செய்த அக்கா - நடந்தது என்ன ?

மதுபோதையில் சொத்து தொடர்பாக தகராறு செய்த போது அக்கா அம்சவேணி தம்பி மணிகண்டனை கட்டையால் தலை மற்றும் முகத்தில் பலமாக தாக்கியதில் இரத்த வெள்ளத்தில் மணிகண்டன் அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

விழுப்புரம்: செஞ்சி அருகே மதுபோதையில் சொத்து தொடர்பாக தகராறு செய்த தம்பியை கட்டையால் அடித்துக் கொலை செய்த அக்கா கைது செய்யப்பட்டார்.

மதுபோதையில் சொத்து தொடர்பாக தகராறு - பிறந்தநாளில் கொலை!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்களவாய் கிராமம் ரோட்டு தெருவை சேர்ந்தவர்கள் காசிலிங்கம் - விஜயகுமாரி தம்பதிகள். இவர்களுக்கு அம்சவேணி (39) என்ற மகளும், மணிகண்டன் (37) என்ற மகன் என இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் மகள் அம்சவேணி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த செல்வம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இரண்டு பிள்ளைகளுடன் கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும் மகன் மணிகண்டன் முதுகலை பட்டய படிப்பு முடித்த நிலையில், மது போதைக்கு அடிமையாகியுள்ளார். இதனால் மணிகண்டன் படித்த படிப்பிற்கு வேலைக்கு செல்லாமல் எலக்ட்ரீசியனாக கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இதனிடையே காசிலிங்கத்தின் தந்தையான அண்ணாமலை (இறந்துவிட்டார்) சம்பாதித்த சுமார் 1 ஏக்கர் நிலத்தை காசிலிங்கத்தின் உடன் பிறந்தவர்கள் ஏமாற்றி விற்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் தன் மீதுள்ள 20 சென்ட் இடத்தை மகன் மணிகண்டன் குடிபோதைக்கு அடிமையாகி ஊதாரியாக சுற்றிவருவதால் தன் மகள் அம்சவேணி மீது காசிலிங்கம் சொத்தை எழுதி வைத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் மணிகண்டன் குடிபோதையில் அடிக்கடி தன் தந்தை காசிலிங்கம் மற்றும் தாய் விஜயகுமாரி ஆகியோரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அம்சவேணி தன் தாய் வீடான மேல்களவாய் கிராமத்திற்கு வந்து தங்கி இருந்து தன் தாத்தா அண்ணாமலை சொத்து தொடர்பாக வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது. 

இதனிடையே மணிகண்டனின் தன்னுடைய 37-வது பிறந்தநாளான ஏப்ரல் 24-ஆம் தேதி ஆன இன்று இரவு மணிகண்டன் மது போதையில் வீட்டிற்கு வந்து தன் பெற்றோர்கள் மற்றும் அக்கா ஆகியோருடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அக்கா அம்சவேணி தம்பி மணிகண்டனை கட்டையால் தலை மற்றும் முகத்தில் பலமாக தாக்கியதில் இரத்த வெள்ளத்தில் மணிகண்டன் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மணிகண்டனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆபத்தான நிலையில் காணப்பட்ட மணிகண்டனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் செல்லும் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தக் கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த செஞ்சி போலீசார் மேல்களவாய் பகுதிக்கு சென்று நேரில் விசாரணை செய்து தம்பியை கட்டையால் தாக்கி கொலை செய்த அக்கா அம்சவேணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சொத்து தொடர்பான தகராறில் உடன் பிறந்த அக்காவே கட்டையால் அடித்து தம்பியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் தன் பிறந்தநாளில் மணிகண்டன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேல்களவாய் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
ABP Premium

வீடியோ

விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |
தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
Gold Rate Historic Peak: அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
இளைஞர்களுக்கு அரசு, தனியார் துறைகளில் வாய்ப்புகள்! 2.78 லட்சம் பேருக்கு வேலை, உதவித்தொகை- விவரம்!
இளைஞர்களுக்கு அரசு, தனியார் துறைகளில் வாய்ப்புகள்! 2.78 லட்சம் பேருக்கு வேலை, உதவித்தொகை- விவரம்!
Volkswagen Cars 2026: குவாலிட்டிக்கு பேர் போன ஃபோக்ஸ்வாகன் - புத்தாண்டில் ப்ளான் என்ன? லிஸ்டட் கார்கள் - SUV மட்டுமா?
Volkswagen Cars 2026: குவாலிட்டிக்கு பேர் போன ஃபோக்ஸ்வாகன் - புத்தாண்டில் ப்ளான் என்ன? லிஸ்டட் கார்கள் - SUV மட்டுமா?
120 தொகுதிகளில் இபிஎஸ் போட்டியிட விருப்ப மனு.! ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த கஜேந்திரன் யார்.?
120 தொகுதிகளில் இபிஎஸ் போட்டியிட விருப்ப மனு.! ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த கஜேந்திரன் யார்.?
Embed widget