மேலும் அறிய

திண்டிவனம் : போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்த தனியார் இ-சேவை மையம்.. எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை..

விழுப்புரம் : திண்டிவனத்தில் போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்த இ சேவை மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

விழுப்புரம் : திண்டிவனத்தில் போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்த இ சேவை மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள நடுவனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 57). இவர் தனது வாக்காளர் அட்டையில் ஆதார் எண்ணை இணைப்பதற்காக திண்டிவனம் தாலுகா அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவரது வாக்காளர் அடையாள அட்டையை வாங்கி பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் அது போலி வாக்காளர் அடையாள அட்டை ஆகும். இது குறித்து செல்வராஜிடம் நடத்திய விசாரணையில், திண்டிவனம் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள ராகவேந்திரா பிரிண்டர்ஸ் என்ற தனியார் இ-சேவை மையத்தில் வாக்காளர் அடையாள அட்டையை பெற்றதாக தெரிவித்தார்.


திண்டிவனம் : போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்த தனியார் இ-சேவை மையம்.. எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை..

இதையடுத்து திண்டிவனம் சப்-கலெக்டர் அமித் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட இ-சேவை மையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு வாக்காளர் அடையாள அட்டை போலியாக தயாரித்து விநியோகம் செய்தது தெரியவந்தது. செல்வராஜுக்கு கொடுத்ததுபோல் ரெட்டணை கிராமத்தை சேர்ந்த 26 வயது பெண்ணுக்கும் வாக்காளர் அட்டையை போலியாக தயாரித்து கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சப்-கலெக்டர் அமித், இ-சேவை மையத்துக்கு 'சீல்' வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் இ-சேவை மையத்தில் இருந்த 3 கம்ப்யூட்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, திண்டிவனம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


திண்டிவனம் : போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்த தனியார் இ-சேவை மையம்.. எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை..

இது குறித்து திண்டிவனம் கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமார் கொடுத்த புகாரின் பேரில் இ-சேவை மையத்தின் நிர்வாகி கமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ்(52) என்பவர் மீது திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சுரேசை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து சப்-கலெக்டர் அமித் கூறுகையில், தவறு செய்தவர்கள் மீது ஜாமீனில் வெளிவராத சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் திண்டிவனம் பகுதியில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களையும் கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் தாசில்தாருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி - கலால் துறை அறிவிப்பு

Naturals CEO : நேச்சுரல்ஸ் சலூன் பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் பிசினஸ் - சி.கே.குமரவேல்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

 

தலைப்பு செய்திகள்

நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget