மதுபோதையில் ஏர் கன்னால் சுட்டதில் 3 பேர் பரிதாபம் ; சம்பவ இடத்தில எஸ்பி விசாரணை... கிராம மக்கள் கொடுத்த அதிர்ச்சி!
விக்கிரவாண்டி அருகே மதுபோதையில் மனைவி, தாய், சித்தப்பா மகனை துப்பாக்கியால் சுட்ட நபரை கிராம மக்கள் மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து விக்கிரவாண்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகேயுள்ள வாக்கூரில் மதுபோதையில் மனைவி, தாய், சித்தப்பா மகனை (ஏர் கண்ணால்) துப்பாக்கியால் சுட்ட நபரை கிராம மக்கள் மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து விக்கிரவாண்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மதுபோதையில் ஏர் கன்னால் சுட்டதில் 3 பேர் பரிதாபம்!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வாக்கூர் கிராமத்தை சார்ந்த தென்னரசு என்பவர் வீட்டில் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த தென்னரசு ஆன்லைனில் ஏர் கன் வாங்கி வைத்திருந்துள்ளார். இன்றைய தினம் அதிகாலையிலையே மது குடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற தென்னரசிடம் வீட்டில் இருந்த தாய் பச்சம்மாள் சண்டையிடவே அவரது மனைவி லாவன்யா திருமணமாகி இரு மாதங்கள் தான் ஆகிறது ஏன் குடித்துவிட்டு வருகிறீர்கள் என கேட்டுள்ளார். இந்த சண்டை பெரிய அளவில் சென்றுள்ளது.
விழுப்புரம் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை
இதனால் ஆத்திரமடைந்த தென்னரசு வீட்டில் வைத்திருந்த ஏர் கன்னை (துப்பாக்கி ) எடுத்து வந்து தாய் மனைவியை சுட்டுள்ளார். துப்பாக்கி சத்தம் கேட்டு தென்னரசுவின் சித்தப்பா மகன் கார்த்தி வெளியே வந்து தென்னரசை தடுத்த போது ஆத்திரம் தாங்காமல் கார்த்தியையும் சுட்டுள்ளார். இதில் கார்த்திக்கு தலையிலும், லாவன்யாவிற்கு கழுத்து பகுதியில் தாய் பச்சைமாளுக்கு உடம்பு பகுதியிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் ஏன் கன் துப்பாக்கியால் சுடப்பட்டவர்களை மீட்டு விழுப்புரம் தலைமை மருத்துவமனையான முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
4 நான்கு ஏர் கன் துப்பாக்கிகள் பறிமுதல்
மருத்துவமனையில் காயமடைந்த மூவருக்கும் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. துப்பாக்கியால் சுட்ட தென்னரசினை கிராம மக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து, விக்கிரவாண்டி காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஏர் துப்பாக்கியால் மூவர் சுடப்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் நேரில் விசாரணை செய்தார். மேலும் ஏர் கன்னால் சுட்ட தென்னரசிடமிருந்து 4 நான்கு ஏர் கன் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரனை செய்து வருகின்றனர்.
ஏர் கன்
ஏர் கன் அல்லது ஏர்கன் என்பது அழுத்தப்பட்ட காற்று அல்லது பிற வாயுக்களிலிருந்து வரும் ஆற்றலைப் பயன்படுத்தி இயந்திரத்தனமாக அழுத்தம் கொடுக்கப்பட்டு பின்னர் வெளியிடப்பட்டு எறிபொருள்களை உந்தி துரிதப்படுத்துகிறது, இது பழமையான ஊதுகுழலின் கொள்கையைப் போன்றது . இது ஒரு துப்பாக்கியிலிருந்து வேறுபட்டது , இது வேதியியல் உந்துசக்திகளின் வெளிப்புற வெப்ப எரிப்பு மூலம் உருவாக்கப்படும் ஆற்றலைப் பயன்படுத்தி எறிபொருள்களைச் சுடுகிறது , பெரும்பாலும் கருப்பு தூள் அல்லது புகையற்ற தூள் .
ஏர் துப்பாக்கிகள் நீண்ட துப்பாக்கி ( ஏர் ரைபிள் ) மற்றும் கைத்துப்பாக்கி ( ஏர் பிஸ்டல் ) ஆகிய இரண்டு வடிவங்களிலும் வருகின்றன . இருப்பினும் சமீபத்திய ஆண்டுகளில் ஸ்லக்ஸ் எனப்படும் மினி பந்து வடிவ உருளை-கோனாய்டல் எறிபொருள்கள் அதிக பிரபலமடைந்து வருகின்றன. சில வகையான ஏர் துப்பாக்கிகள் (பொதுவாக ஏர் ரைபிள்கள்) டார்ட்ஸ் (எ.கா., ட்ரான்குலைசர் துப்பாக்கிகள் ) அல்லது ஹாலோ -ஷாஃப்ட் அம்புகள் ("ஏர்போஸ்" என்று அழைக்கப்படுபவை) போன்ற துடுப்பு -நிலைப்படுத்தப்பட்ட எறிபொருளையும் செலுத்தக்கூடும் .





















