மேலும் அறிய

‛சகதி அடிச்சது குத்தமாடா...’ பதிலடி தருவதாக அரை போதையில் அடுத்த வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கும்பல் கைது!

வேலூரில் தன் மீது சகதி அடித்தவரை பழிதீர்ப்பதாக நினைத்து அரை போதையில் அடுத்த வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் சைதாப்பேட்டை சுருட்டுகார தெருவை சேர்ந்தவர் அம்ரோஸ் (24). ஆட்டோ ஓட்டுனரான இவர் நேற்று அதே பகுதியில் தெருவோரம் நின்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த  கலீம் என்பவர் பைக்கில் வந்துள்ளார். அவரது பைக் டயரில் இருந்து தெறித்த சகதி அம்ரோஸ் மீது பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.  அதன்பின்னர் அங்குள்ள பொதுமக்கள் இருவரையும் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர் 

இதனைத் தொடர்ந்து கார் ஓட்டுனர் கலீம் சுருட்டுக்கார தெருவில் உள்ள அவரது வீட்டு முன்பு வழக்கம் போல் பைக்கை நிறுத்திவிட்டு முதல் மாடியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார். அதே வீட்டில் கீழ்ப்பகுதியில் நைமுதீன் வயது (30) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு சுமார் 1 மணிக்கு மது போதையில் 3 பேர் கொண்ட கும்பலாக கலீம் வீட்டை தேடி அங்கு வந்த அம்ரோஸ், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரது வீட்டு நோக்கி பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளார். அதில் அங்கிருந்த பைக் ஒன்று எரிந்தது. வீட்டின் சுவரிலும் தீப்பற்றியது.  




‛சகதி அடிச்சது குத்தமாடா...’ பதிலடி தருவதாக அரை போதையில் அடுத்த வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கும்பல் கைது!

 

என்னிடம் மோதினால் இது தான் கதி என கர்ஜித்த அம்ரோஸ், முன்பு நடந்த முன்பகையை தீர்த்த சந்தோசத்தில் ஆர்ப்பரித்திருக்கிறார். கலீமிற்கு அது எதுவுமே தெரியாத நிலையில், கீழ் வசிக்கும் நைமுதினின் குடும்பத்தாருக்கு சத்தம் கேட்க, வெளியே வந்து அவர்கள் கூச்சல் போட, அக்கம் பக்கத்தினர் ஓடி வர, அவர்களை பார்த்து அம்ரோஸ் மற்றும் அவரது கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது. 

அதன் பிறகு தான் தெரிந்தது, அம்ரோஸ் அன் டீம் பெட்ரோல் குண்டு வீசியது கலீம் வீட்டில் அல்ல, நைமுதின் வீட்டில் என்பது. அதில் எரிந்த பைக்கும் நைமுதினுடையது. பாதிக்கப்பட்ட வீட்டில் பகுதிகளும் அவர்களுடையதே. இச்சம்பவம் குறித்து நைமுதினின் குடும்பத்தினர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர் . தகவல் அறிந்த வேலூர் வடக்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். 


‛சகதி அடிச்சது குத்தமாடா...’ பதிலடி தருவதாக அரை போதையில் அடுத்த வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கும்பல் கைது!

இதனைத்தொடர்ந்து வேலூர் வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, பெட்ரோல் குண்டு வீசிய அம்ரோஸ் மற்றும் அவருடைய கூட்டாளிகளான யூசுப், அப்துல்லா ஆகிய 3 பேரையும் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த அவர்கள் மூவரையும் சுற்றி வளைத்த தனிப்படை போலீசார், கையும் களவுமாக பிடித்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறையில் அடைத்தனர். ஒரு சாதாரண விவகாரத்திற்காக பெட்ரோல் குண்டு வரை சென்றதும், அதை சம்மந்தமே இல்லாமல் வேறு ஒருவர் வீட்டில் வீசியதும் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

“பெண்கள் விஷயத்தில் பொய்யான புகார் கொடுப்போம்” உ.பி., வியாபாரியை மிரட்டிய வணிகர்கள்.. உயிர் தப்பிய தொழிலாளர்கள் - நடந்தது என்ன?
“பெண்கள் விஷயத்தில் பொய்யான புகார் கொடுப்போம்” உ.பி., வியாபாரியை மிரட்டிய வணிகர்கள்.. உயிர் தப்பிய தொழிலாளர்கள் - நடந்தது என்ன?
சண்டை போட்ட கள்ளக்காதலி.. தட்டிக்கேட்ட மாமனார் கொடூர கொலை.. சிரித்துக்கொண்டே வந்த கள்ளக்காதலன்
சண்டை போட்ட கள்ளக்காதலி.. தட்டிக்கேட்ட மாமனார் கொடூர கொலை.. சிரித்துக்கொண்டே வந்த கள்ளக்காதலன்
ஏலகிரி லாட்ஜில் நடந்த கொடூரம்! தற்கொலை இல்லை... கொலை தான்! – மாட்டிக்கொண்ட ஆண் ஊழியர்!
ஏலகிரி லாட்ஜில் நடந்த கொடூரம்! தற்கொலை இல்லை... கொலை தான்! – மாட்டிக்கொண்ட ஆண் ஊழியர்!
அதிர வைக்கும் க்ரைம் ரேட்.. யார் இந்த சி.டி.மணி? இவருக்கு 200 கோடி சொத்தா?
அதிர வைக்கும் க்ரைம் ரேட்.. யார் இந்த சி.டி.மணி? இவருக்கு 200 கோடி சொத்தா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
"கடன் வாங்காதீர்கள்" - அதிக கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம் - முதல்வர் விஜய் அட்வைஸ்
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
Embed widget