மேலும் அறிய

அரசு பஸ்ஸை அலற வைத்த போதை பெண்: போலீசில் கதறிய பயணிகள்... சாந்தியை சாந்தப்படுத்த முடியாத திக் திக் நிமிடங்கள்!

‛இது என்னடா... நமக்கு வந்த சோதனை...’ என பலரும் வாயடைத்தனர். எத்தனை பேர் வந்தாலும், அத்தனை பேரையும் ‛வாங்கடா... வாங்கடா...’ என தனி பெண்ணாக சீறிப்பாய்ந்தார் சாந்தி. 

 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஈரோட்டிலிருந்து மதுரையை நோக்கி 50 பயணிகளுடன் கோவை போக்குவரத்து கழக பேருந்து வந்து கொண்டிருந்தது. ரம்யமான பாடல், குளுமையான சூழல் என அருமையான பயணத்தில் அமர்ந்திருந்தனர் பயணிகள். ஆனால், அது எல்லாம் கரூர் வரும் வரை தான். கரூர் வந்தது... கூடவே கவலையும் வந்தது. சாந்தி என்ற பயணி, அப்போது தான் அந்த பஸ்ஸில் ஏறி, முன்புற படிக்கட்டு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்தார். அவரோடு வேட்டி சட்டை அணிந்த ஒரு நபரும் பயணித்தார். அவர் அந்த பெண்ணின் வீட்டில் பணியாற்றும் தோட்டக்காரராம். 

அரசு பஸ்ஸை அலற வைத்த போதை பெண்: போலீசில் கதறிய பயணிகள்... சாந்தியை சாந்தப்படுத்த முடியாத திக் திக் நிமிடங்கள்!

பஸ் நகர்ந்தம், ஒரு விதமான வித்தியாசமான வாசம் வந்திருக்கிறது. அது மதுபான வாசம் என்பதை அனைவரும் அறிந்து கொண்டனர். ஆனால், யார் குடித்திருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் தான், பேருந்தின் கியர் மாறியது போல, சாந்தியின் பேச்சும் மாறியது. தன்னுடன் வந்த பணியாளரை மெல்ல மெல்ல வசைபாட தொடங்கினார் சாந்தி. பஸ் டாப் கியருக்கு மாறிய போது, சாந்தியும் டாப் கியர் எடுத்தார். காதில் கேட்க முடியாத ஆபாச வார்த்தைகளால் உடன் வந்தவரை அர்ச்சனை செய்யத் தொடங்கினார். 

அதை கேட்ட பயணிகள், என்ன செய்வது என்று தெரியாமல் நெழிந்தனர். நேரம் செல்ல செல்ல... வார்த்தைகளின் வக்கிரம் உச்சத்தில் சென்றது. தட்டிக் கேட்கலாம் என சிலர் முயன்ற போது, அவர்களை நோக்கி அர்ச்சனை திரும்பியது. ‛இது என்னடா... நமக்கு வந்த சோதனை...’ என பலரும் வாயடைத்தனர். எத்தனை பேர் வந்தாலும், அத்தனை பேரையும் ‛வாங்கடா... வாங்கடா...’ என தனி பெண்ணாக சீறிப்பாய்ந்தார் சாந்தி. 

பேருந்தில் இருந்த பெண்கள் சிலரும், அவரை கட்டுப்படுத்த முயற்சித்து, கடுப்பாகி அமர்ந்தனர். உலகில் உள்ள ஒட்டுமொத்த கெட்ட வார்த்தைகளால் நிரம்பி வழிந்தது அந்த அரசுப் பேருந்து, ஆனால், பயணிகள் எண்ணிக்கை என்னவோ... அதை விட குறைவு தான். சாந்தியை சாந்தப்படுத்த பேருந்து நடத்துனர், ஓட்டுநர் எல்லாரும் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்து, இறுதியில் போலீஸ் ஸ்டேஷன் செல்ல முடிவு செய்தனர். 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வந்ததும்,  பேருந்தை காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லுமாறு  பயணிகள் கூறினார். இதுக்கு மேல் காது குடித்து கேட்க முடியாது என்று அவர்கள் புலம்பினர். டிரைவருக்கும், கண்டக்டருக்கும் அதே நிலையே. எனவே பேருந்து வேடசந்தூர் காவல் நிலையம் சென்றது. பஸ்ஸில் இருந்து பந்தாவாக இறங்கிய சாந்தி, மீண்டும் ஆபாச வார்த்தைகளை வாந்தி எடுத்தார். இதனால் காவல் நிலையமும் காவா நிலையமாக மாறியது. 

அரசு பஸ்ஸை அலற வைத்த போதை பெண்: போலீசில் கதறிய பயணிகள்... சாந்தியை சாந்தப்படுத்த முடியாத திக் திக் நிமிடங்கள்!

அந்த பெண் பேசிய பேச்சால் தங்கள் காதுகள் ரத்தகளறியானது குறித்து விசாரணை அதிகாரிகளிடம் புலம்பித் தீர்த்தனர் பயணிகள். ‛சரி.. சரி நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன்...’ என அவர்களை ஆறுதல் படுத்தி அனுப்பி வைத்தார் எஸ்ஐ. அதன் பின் அந்த பெண்ணை அழைத்து விசாரணை நடத்திய போலீசார், ‛இனிமே இப்படி பண்ணாதம்மா... போய் ஒழுங்க இரு...’ என எச்சரித்து அனுப்பினர். குயிலை பிடிச்சு கூண்டில் அடைக்க முயற்சித்த பயணிகளின் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், சிறைவாசம் ஜஸ்ட் மிஸ்ஸான சாந்தி, உடையாத பூந்தியாய் அப்படியே வெளியே வந்தார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

வீட்டிலேயே கிளினிக்.. சிக்கிய கருமுட்டை விற்பனை கும்பல்! ஒரே பெண்ணிடம் 30-க்கும் மேற்பட்ட முறை!
வீட்டிலேயே கிளினிக்.. சிக்கிய கருமுட்டை விற்பனை கும்பல்! ஒரே பெண்ணிடம் 30-க்கும் மேற்பட்ட முறை!
மயிலாடுதுறை போலீசாரின் அதிரடி: அடுத்தடுத்து பல திருட்டு வழக்குகளில் சிக்கிய குற்றவாளி.! 
மயிலாடுதுறை போலீசாரின் அதிரடி: அடுத்தடுத்து பல திருட்டு வழக்குகளில் சிக்கிய குற்றவாளி.! 
புருஷனை போட்டுத்தள்ளிவிட்டு! பக்கத்து ரூமில் மனைவி செய்த காரியம்! கோர்ட் பரபர தீர்ப்பு!
புருஷனை போட்டுத்தள்ளிவிட்டு! பக்கத்து ரூமில் மனைவி செய்த காரியம்! கோர்ட் பரபர தீர்ப்பு!
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Embed widget