மேலும் அறிய

வாணியம்பாடியில் ஸ்வீட் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம்; இரண்டு பேர் கைது

பழிதீர்க்கும் வகையில் சதாம் தன்னுடைய நண்பர்களான முஹம்மத் வசீம்,  நர்மதன் உதவியுடன் பெட்ரோல் குண்டுகளை தீ வைத்து ஸ்வீட் கடைக்குள் வீசியதாக விசாரணையில் தெரிய வந்தது. 

வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் ஸ்வீட் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியை போலீசார்  வலைவீசி தேடி வருகின்றனர்.
 
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம்  அருகில் தமிழருவி என்பவர் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார்‌. இந்நிலையில், கடந்த 30 ஆம் இரவு 11 மணிக்கு ஸ்வீட் கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை கடைக்குள்வீசி சென்றுள்ளனர். பின்னர் ஸ்வீட் கடையில் தீ மள மள வென பற்றி எரிந்துள்ளது. மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
 
இச்சம்பவம் குறித்து நகர போலீசார் வழக்கு  பதிவு செய்து  வாணியம்பாடி டிஎஸ்பி  விஜயகுமார் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
 
இந்நிலையில் வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள உடைந்த பாலம் அருகில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே நின்று கொண்டு இருந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் அழைத்து விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

வாணியம்பாடியில் ஸ்வீட் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம்; இரண்டு பேர் கைது
 
விசாரணையில் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த முஹம்மத் வசீம் மற்றும் கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த நர்மதன் என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் பேருந்து நிலையம் அருகில் கருணா இனிப்பகத்தில் கடந்த 30ம்  தேதி இரவு பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பி தீப்பற்ற வைத்து வீசிவிட்டு சென்றவர்கள் என்று விசாரணையில் தெரியவந்தது.
 
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த சதாம் என்பவர் கடந்த 3 மாதத்திற்கு முன்பு தன்னுடைய மனைவி உடன் சம்பவம் நடந்த இணிப்பகத்திர்க்கு சென்றுள்ளார். அப்போது கடையில் இருந்த ஊழியரிடம் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கடை ஊழியர் நந்தகுமார் என்பவர் சதாம் என்பவரை அவரது மனைவி முன்பு அவதூறாக பேசிய காரணத்தால் முன்விரோதம் இருந்து வந்தது.
 
இதனை பழிதீர்க்கும் வகையில் சதாம் தன்னுடைய நண்பர்களான முஹம்மத் வசீம்,  நர்மதன் உதவியுடன் பெட்ரோல் குண்டுகளை தீ வைத்து ஸ்வீட் கடைக்குள் வீசியதாக விசாரணையில் தெரிய வந்தது. 
 
இதனை தொடர்ந்து முஹம்மத் வசீம் மற்றும் நர்மதனனை ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலை மறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான சதாம்  என்பவரை போலீசார் தேடி  வருகின்றனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பாமகவில் பரபரப்பு... என்னை அவரால் நீக்க முடியாது ; அன்புமணிக்கு அதிகாரம் இல்லை ! பாமக எம்எல்ஏ பரபரப்பு பேட்டி
"அன்புமணிக்கு அதிகாரம் இல்லை" என்னை அவரால் நீக்க முடியாது ; எதிர்த்து நிற்கும் அருள்
Iran Accepts Damage: அதான பாத்தோம், பங்க்கர் பஸ்டர்னா சும்மாவா.?! சேதாரத்தை ஒப்புக்கொண்ட ஈரான் - அடுத்து என்ன.?
அதான பாத்தோம், பங்க்கர் பஸ்டர்னா சும்மாவா.?! சேதாரத்தை ஒப்புக்கொண்ட ஈரான் - அடுத்து என்ன.?
கொடுமை! காதலுடன் சேர்ந்து மனைவி செய்த டார்ச்சர்.. மனம் உடைந்த கணவன் தற்கொலை!
கொடுமை! காதலுடன் சேர்ந்து மனைவி செய்த டார்ச்சர்.. மனம் உடைந்த கணவன் தற்கொலை!
"சாத்தான் வேதம் ஒதுவது போல் இருக்கு" ஸ்டாலினை கலாய்த்த இபிஎஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayakumar vs EPS : ’’பழசை மறந்துட்டீங்களா EPS?'' Silent mode-ல் ஜெயக்குமார் வெளியான பகீர் பின்னணி
Udhayanidhi vs Kanimozhi : துணை பொதுச்செயலாளர் உதயநிதி !கனிமொழியை வைத்து ஸ்கெட்ச்ஸ்டாலின் MASTERMIND
கனிமொழிக்கு புதிய பதவி? அறிவாலயத்தில் தனி அலுவலகம்! ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்!
Union Minister Meena : மத்திய அமைச்சராகும் மீனா?வாக்கு கொடுத்த BIGSHOT திடீர் டெல்லி விசிட்
தவெகவினரை தாக்கிய திமுகவினர் உடனே CALL போட்ட விஜய்”எதுனாலும் நான் பாத்துக்குறேன்” DMK vs TVK Fight

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாமகவில் பரபரப்பு... என்னை அவரால் நீக்க முடியாது ; அன்புமணிக்கு அதிகாரம் இல்லை ! பாமக எம்எல்ஏ பரபரப்பு பேட்டி
"அன்புமணிக்கு அதிகாரம் இல்லை" என்னை அவரால் நீக்க முடியாது ; எதிர்த்து நிற்கும் அருள்
Iran Accepts Damage: அதான பாத்தோம், பங்க்கர் பஸ்டர்னா சும்மாவா.?! சேதாரத்தை ஒப்புக்கொண்ட ஈரான் - அடுத்து என்ன.?
அதான பாத்தோம், பங்க்கர் பஸ்டர்னா சும்மாவா.?! சேதாரத்தை ஒப்புக்கொண்ட ஈரான் - அடுத்து என்ன.?
கொடுமை! காதலுடன் சேர்ந்து மனைவி செய்த டார்ச்சர்.. மனம் உடைந்த கணவன் தற்கொலை!
கொடுமை! காதலுடன் சேர்ந்து மனைவி செய்த டார்ச்சர்.. மனம் உடைந்த கணவன் தற்கொலை!
"சாத்தான் வேதம் ஒதுவது போல் இருக்கு" ஸ்டாலினை கலாய்த்த இபிஎஸ்
பொதுச்செயலாளர் பதவி பறிப்பு?  அப்செட்டில் துரைமுருகன்  சமாதானம் செய்யும் ஸ்டாலின்
பொதுச்செயலாளர் பதவி பறிப்பு? அப்செட்டில் துரைமுருகன் சமாதானம் செய்யும் ஸ்டாலின்
பனையூரை விட்டு வெளியே வரும் விஜய்! ஒரு மாதத்திற்கு சுற்றுப்பயணம்! சொல்கிறார் ஆதவ் !
பனையூரை விட்டு வெளியே வரும் விஜய்! ஒரு மாதத்திற்கு சுற்றுப்பயணம்! சொல்கிறார் ஆதவ் !
போதைப்பொருள் வழக்கு.. போலீஸ் தனிப்படையினரிடம் சிக்கிய நடிகர் கிருஷ்ணா ரகசிய இடத்தில் விசாரணை
போதைப்பொருள் வழக்கு.. போலீஸ் தனிப்படையினரிடம் சிக்கிய நடிகர் கிருஷ்ணா ரகசிய இடத்தில் விசாரணை
எங்களோடு War செய்யும் அளவுக்கு அதிமுக IT wing-க்கு தகுதியில்லை - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா
எங்களோடு War செய்யும் அளவுக்கு அதிமுக IT wing-க்கு தகுதியில்லை - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா
Embed widget