மேலும் அறிய

Crime: இரத்த களமாக மாறிய திருமண வீடு.. புதுமணத் தம்பதி உள்பட 6 பேர் வெட்டிக்கொலை.. அதிர வைக்கும் சம்பவத்தின் பின்னணி..!

உத்தரப்பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருமண ஊர்வலம்:

உத்தரப்பிரதேச மாநிலம் கோகுல்பூர் அர்சரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திர யாதவ். இவருக்கு ஷிவ்வீர், சோனு மற்றும் புல்லன் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இதனிடையே கடந்த ஜூன் 23 ஆம் தேதி 2வது மகன் சோனுவின் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து மணமக்கள் உறவினர்கள், நண்பர்க புழைசூழ திருமண ஊர்வலம் சென்றுள்ளனர்.  எட்டாவாவில் இருந்து  சௌபியா பகுதியில் உள்ள கங்காபூர் கிராமத்திற்கு ஊர்வலமானது நடைபெற்றது.

புது மருமகள் சோனி (20) வருகையால் வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியான சூழலில் இருந்துள்ளனர். மேலும் அன்றைய தினம் இரவு ஒரு மணி வரை அனைவரும் டிஜே வாசித்து பாடி நடனமாடிக் கொண்டிருந்தனர்.

வெட்டிப்படுகொலை:

இதனைத் தொடர்ந்து அடுத்த சில மணி நேரத்தில் சோனு, சோனி, சவுரப் நகரைச் சேர்ந்த மைத்துனர் ஹவிலியா , இளைய சகோதரர் புல்லன், சகோதரனின் நண்பர் தீபக் என 5 பேரையும் மூத்த பையன் ஷிவ்வீர் கூர்மையான ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொன்றுள்ளார். இந்த தாக்குதலில் தந்தை சுபாஷ், அவரது மனைவி மற்றும் மாமா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். 

இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது வீடே இரத்த களமாக காட்சியளிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் ஷிவ்வீர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையில் எஸ்பி வினோத் குமார் தலைமையிலான குழு ஒன்று  அர்சரா கிராமத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். 

பெரும் பரபரப்பு:

கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காகவும், காயமடைந்தவர்களை சிகிச்சைக்காகவும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் காயமடைந்த 3 பேரில் ஒருவர் இறந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், ஷிவ்வீர், நொய்டாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாகவும், திருமணத்தில் கலந்துகொள்ள வீட்டிற்கு வந்ததாகவும் தெரிய வந்தது. 

6 பேர் குடும்ப உறுப்பினராலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தலைப்பு செய்திகள்

தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
Embed widget