Crime: ட்யூஷன் எடுக்கவந்த ஆசிரியைக்கு பாலியல் வன்கொடுமை.. மருத்துவரால் நேர்ந்த கொடூரம்.. பகீர்..
தன்னுடைய குழந்தைகளுக்கு ட்யூஷன் எடுக்க வந்த ஆசிரியை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆசிரியை ஒருவரை மருத்துவர் பல நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவின் இந்திரா நகர் பகுதியில் மருத்துவர் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய குழந்தைகளுக்கு ஆசிரியர் ஒருவர் ட்யூஷன் எடுக்க வந்துள்ளார். அப்போது அந்த ஆசிரியை படமாக எடுத்து அதை ஆபாசமாக மருத்துவர் மார்பிங் செய்துள்ளார். அவர் இந்த மார்பிங் செய்த ஆபாசமான படங்களை அந்த ஆசிரியையிடம் காட்டி மிரட்டியுள்ளார். அத்துடன் தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு கூறியுள்ளார்.
அவர் மிரட்டியதை தொடர்ந்து அந்த ஆசிரியை பல முறை 50 வயது மதிக்கதக்க மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக கருவுற்ற ஆசிரியைக்கு அவர் கருகலைப்பு மருந்துகளை கொடுத்து வந்துள்ளார். இதை உட்கொண்டதால் அந்த ஆசிரியையின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியையின் குடும்பத்தினர் கேட்டுள்ளனர். அப்போது அவர் தனக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக குடும்பத்தினருடன் தெரிவித்துள்ளார். மேலும் தான் கருவுற்று இருந்தது தொடர்பாகவும் அவர் தன்னுடைய குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவருடைய சகோதரர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் பெண் ஆசிரியரை மருத்துவர் அறையில் அடைத்து வைத்திருந்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. அந்த மருத்துவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.அவரிடம் வேறு எதுவும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவர் ஒருவர் இப்படி செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ட்யூஷன் எடுக்க சென்ற வீட்டில் ஆசிரியை ஒருவருக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:லாட்டரி சீட்டில் நஷ்டம்.. கற்றுக்கொள்ள Friends of Police.. கொள்ளையன் வேலூர் மணிகண்டன் சிக்கியது எப்படி ?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்