Crime: விதவை தாய்க்கும், 12 வயது மகளுக்கும் பாலியல் வன்கொடுமை - உத்தரபிரதேசத்தில் நடந்த கொடூரம்
உத்தரபிரதேசத்தில் தாய்க்கும் அவரது 12 வயது மகளுக்கும் பாலியல் வன்கொடுமை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாவட்டத்தில் உள்ள பரதாரி பகுதியில் உள்ள விதவை பெண் ஒருவர் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், தானும் தனது மகளும் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
பெண்ணுடன் நட்பு
புகார் அளித்த உத்தரப்பிரதேசம் மாவட்டத்தில் உள்ள பரதாரி பகுதியில் வசிக்கும் இந்த பெண் விதவை என்று தகவல்கள் வந்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை அவர் அளித்த புகாரில், விதவையான அந்தப் பெண், மூன்று மாதங்களுக்கு முன்பு இராம் சைஃபி என்ற வேறொரு பெண்ணுடன் நட்பு கொண்டதாகக் கூறினார். படிப்படியாக, அவர்கள் ஒருவருக்கொருவர் வீடுகளுக்குச் செல்லத் தொடங்கினர் என்று காவல்துறை கண்காணிப்பாளர் (நகரம்) ராகுல் பாடி கூறினார்.
விதவை பாலியல் வன்கொடுமை
நாகடியாவில் வசிக்கும் சைஃபி என்ற பெண், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்களை தனது வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களுடன் உடல் உறவை ஏற்படுத்திக் கொள்ள வற்புறுத்தி வருவதாக பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் குற்றம் சாட்டினார். மற்றவர்களை போலவே அவரும் அவரது வலையில் சிக்கியதாகவும், சைஃபி தன்னை ஆபாசமான வீடியோக்களை எடுத்ததாகவும் கூறுகிறார். அதோடு அந்த அவற்றைப் பயன்படுத்தி அவளை மிரட்டி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் கூறப்படுகிறது.
மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்
இவர் பாதிக்கபட்டதோடு முடியவில்லை, இராம் சைஃபி என்ற பெண்ணின் சகோதரர் பப்லு சைஃபியும் பலமுறை அந்த விதவை பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு சென்று பாதிக்கபட்ட பெண்ணின் 12 வயது மகளை அவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வியாழனன்று, இராம் சைஃபி அந்த விதவை பெண்ணையும், அவரது 12 வயது மகளையும் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
மதமாற்ற ஏற்பாடுகள்
அங்கு சென்றதும் சஃபியின் தந்தை ஒரு 'மவுல்வி (மதகுரு)' என்று இவர்களுக்கு தெரிய வந்துள்ளது. அவரது முன்னிலையில் தாய் மற்றும் மகள் இருவரையும் மதம் மாறக் கூறி வற்புறுத்தப் பட்டுள்ளது. அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, குற்றவாளிகள் அந்த பெண்ணையும் அவரது மகளையும் சரமாரியாக தாக்கி உள்ளனர். இந்நிலையில், அவரது புகாரின் அடிப்படையில், அடையாளம் தெரியாத மதகுரு மற்றும், அவரது மகள் இராம் சைஃபி, மகன் பப்லு சைஃபி உடன் மேலும் ஒருவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் உத்தரபிரதேச சட்டம் ஆகியவற்றை மீறியதால், மதமாற்ற தடைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்று காவல்துறை அதிகாரி பதி கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையும் நடந்து வரும் நிலையில், இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்.