மேலும் அறிய
Advertisement
தந்தை கண் முன்னே மகள் கொடூர கொலை - உ.பி.யில் தொடரும் கொடுமைகள்!
உ.பி.யில் தந்தை முன்பு மகள் சுட்டுக் கொலை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தை குற்றச் சம்பவங்களின் கோட்டை என்றே சொல்லாம். இங்கு பிரச்சனை இல்லாமல் மக்கள் வாழ்வார்களா என்றால், அது மிகப் பெரிய கேள்வி குறியே. ஒரு கோர சம்பவம் முடிவடைவதற்குள் அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கும்.
அதுபோன்ற ஒரு கோர சம்பவம் தான் உ.பியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி அரங்கேறியது. லக்னோவைச் சேர்ந்தவர் ராஜு நயன் சிங். இவருக்கும், விஜய் பிரஜாபதி என்பவருக்கும் ராஜு நயன் சிங்கிர்க்கும் இடையே பண தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக விஜய் பிரஜாபதி கடந்த 20 ஆம் தேதியன்று ராஜு நயன் வீட்டிற்குச் சென்றிருந்தார். அப்போது பணத்தை கேட்டு போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய போது விஜய் பிரஜாபதி, ராஜு நயன் சிங்கை அடித்து தாக்கி உள்ளார்.
Strict legal action should be taken against the culprits.#JusticeForKajal#JusticeForKajal pic.twitter.com/VMebTQSoWU
— RAJ KISHAN (@rajkishanmonu) August 29, 2021
இதனை மறைத்திருந்த பார்த்துக் கொண்ட ராஜூ நயன் சிங் மகள் காஜல் சிங் (17) நடந்த அனைத்தையும் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து இருந்தார். இதனால் கடும் ஆத்திரமடைந்த விஜய் பிரஜாபதி ராஜூ நயனின் மகள் வயிற்று பகுதியில், துப்பாக்கியால் கடுமையாகச் சுட்டு விட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடினார்.
உடனே அவரை மீட்டு லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த சிறுவி, கடந்த புதன்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக லக்னோ காவலர்கள் வழக்கு பதிவு செய்து, விஜய் பிரஜாபதியை தீவிரமாகத் தேடும் படலத்தில் இறங்கி இருக்கின்றனர். மேலும் கொலை செய்த குற்றவாளியை பிடித்து தருபவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும் என காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
17வயது பள்ளி சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சமூக வாசிகள் ட்விட்டர் தளத்தில் #justiceforKajal என்ற ஹேஷ் டேகை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனைக் கண்ட நெட்டிசன்கள் காஜலை கொலை செய்த நபரை அம்மாநில அரசு கண்டு பிடித்து தகுந்த முறையில் தண்டனை கொடுக்க வேண்டும், என சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்துள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
விழுப்புரம்
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion