மேலும் அறிய

Crime: கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை..? - 2 பெண்கள் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே வீட்டில் கள்ளத்தனமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முயன்ற இரண்டு பெண்கள் கைது - 731 மது பாட்டில்கள் பறிமுதல்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே எச்.புதுப்பட்டியில் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்வதாக அ.பள்ளிப்பட்டி காவல் நிலைய காவல் துறையினருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன் உத்தரவின்படி  அ.பள்ளிப்பட்டி காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர்கள் மாதையன், சக்திவேல் மற்றும் காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல்  விலைக்கு விற்பனை செய்ய வீட்டில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
 
Crime: கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை..? - 2 பெண்கள் கைது
 
இதனை தொடர்ந்து சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்ததாக ராணி (45) கந்தாயி (62) ஆகிய இரண்டு பெண்களை கைது செய்தனர். இதனை தொடர்ந்து விற்பனைக்காக மூட்டையில் மறைத்து வைத்திருந்த சுமார் ரூ 1 லட்சம் மதிப்பிலான 731 மதுபாட்டில்களை, காவல் துறையினர்  பறிமுதல் செய்தனர். மேலும்  இருவர் மீது வழக்கு பதிவு செய்து பாப்பிரெட்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
 
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து 15,000 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு.
 
Crime: கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை..? - 2 பெண்கள் கைது
 
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால், கடந்த ஒரு மாத காலமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை முழுவதுமாக குறைந்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படுகின்ற நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது.  இதனால் காவிரி ஆற்றல் கடந்த சில நாட்களாக  படிப்படியாக நீர்வரத்து குறைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 14,000கன அடியிலிருந்து சரிந்து 10,000 கன அடியாக குறைந்தது. 
 
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,000 கன அடியிலருந்து15,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் போது பிரதான அருவிக்கு செல்கின்ற நடைபாதைகள், பிரதான அருவி, பெண்கள் குளிக்கும் அருவி உள்ளிட்ட இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு 45 நாட்களாக தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டு வருகிறது. மேலும் சேதம் காரணமாக, குளிப்பதற்கான தடை நீடிப்பதால், காவல் துறையினர் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
தலைப்பு செய்திகள்

மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Embed widget