மேலும் அறிய

Crime: ஒரே நாளில் இரண்டு கொலைகள்.....கன்னியாகுமரியில் பரபரப்பு...!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் இரண்டு கொலைகள் நடைபெற்றது

நாகர்கோவில் அருகே சுங்கான்கடை பகுதியில் நான்கு வழி சாலையில் மது அருந்தி கொண்டிருந்தவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அஜின் ஜோஸ் என்பவருடன் இருந்த வாலிபரை கத்தியால் கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார்.  அவரை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்.பி.ஹரி கிரண் பிரசாத் தெரிவித்தார்.
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று காலையில் மணக்குடி அருகே வட மாநில தொழிலாளியை ஒருவர் கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல நேற்று இரவு சுங்காங்கடை அருகே நான்கு வழி சாலையில் மேலும் ஒரு கொலை நடந்துள்ளது. குருந்தன்கோடு பகுதியைச் சேர்ந்த அஜின் ஜோஸ் என்பவர் அவரது நண்பர் அசோக் மற்றும் வேறு ஒரு வாலிபருடன் நான்கு வழி சாலையில் மூன்று பேராக சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறி அஜின் ஜோஸ் என்பவர் உடன் இருந்த வாலிபரை கத்தியால் கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார். அவருடன் வந்த அசோக் என்பவரை பொது மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அஜின் ஜோஸ் என்பவர் ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்பு உடையவர் என்பது தெரியவந்தது. மேலும் இறந்தவர் யார் என்பது கைதான அசோக்கிற்கும் தெரியவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த எஸ் பி ஹரி கிரண் பிரசாத் அப்பகுதியை பார்வையிட்டார். மேலும் கொலை செய்ய பயன்படுத்தி கத்தி கிடைக்காத நிலையில் கத்தியின் உறை கிடைத்துள்ளது. அதனை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் அங்கு ஏராளமானோர் இரவு நேரங்களில் மது அருந்த வரும் பகுதியாக உள்ளது. இந்த கொலை தொடர்பாக அப்பகுதி மக்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Crime: ஒரே நாளில் இரண்டு கொலைகள்.....கன்னியாகுமரியில் பரபரப்பு...!

 
மேலும், கொலையாளி யார், எந்த ஊரை சேர்ந்தவர், எதற்காக இந்த கொலை நடந்தது உள்ளிட்ட எந்த விபரமும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. கொலை செய்து விட்டு அஜின் ஜோஸ் தப்பி ஓடியதாக அசோக் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய கொலையாளியை பிடிக்க மூன்று தனி படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
 
அண்மை காலமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

"எப்போது இடிந்து விழுமோ?" - மயிலாடுதுறையில் 20 குழந்தைகளின் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்!
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை
பெற்றோர்களே உஷார்! 64 வயது தாத்தாவால் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... மயிலாடுதுறையில் பகீர்!
பெற்றோர்களே உஷார்! 64 வயது தாத்தாவால் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... மயிலாடுதுறையில் பகீர்!
வேலை தேடிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் !! நகையை பறித்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை
வேலை தேடிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் !! நகையை பறித்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK TO TVK : விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
Stephen Fleming: தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
VCK Thirumavalavan : ’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?
’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?
Hyundai Upcoming SUV: மிட்-சைஸ் எஸ்யுவி CNG பிரிவில் மிரட்டும் மாருதி - ஹுண்டாய் ரைவல் ஆன் - தி வே..! விலை
மிட்-சைஸ் எஸ்யுவி CNG பிரிவில் மிரட்டும் மாருதி - ஹுண்டாய் ரைவல் ஆன் - தி வே..! விலை
வழக்குகளை அடுக்கும் TVK, மத்திய அமைச்சராகும் திமுக MP? BJP கூட்டணி? கன்ஃபார்ம் செய்த Ex.அமைச்சர்
வழக்குகளை அடுக்கும் TVK, மத்திய அமைச்சராகும் திமுக MP? BJP கூட்டணி? கன்ஃபார்ம் செய்த Ex.அமைச்சர்
Seeman Emotional : ’பெரியப்பா இருக்கேண்டா - இயக்குநர் செழியன் மறைவு | சீமான் செய்த செயல்’ நெகிழ்ச்சி பதிவு..!
’இயக்குநர் செழியன் மறைவு – சீமான் செய்த செயல்’ நெகிழ்ச்சி பதிவு..!
CM Vijay Perambur: வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
E.V. Velu Look Out Notice : எ.வ.வேலு வழக்கில் திடீர் திருப்பம்.! அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்த தவெக அரசு- உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன.?
எ.வ.வேலு வழக்கில் அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்த தவெக அரசு- உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன.?
Embed widget