’வாழைப்பழ’ காமெடி பாணியில் நடந்த ’பீர் பாட்டில் சண்டை’... பீர் பாட்டிலால் தாக்கியதில் ஒருவர் கவலைக்கிடம்
கள்ளக்குறிச்சி அருகே மது போதையில் இரண்டு இளைஞர்கள் பீர் பாட்டிலால் தாக்கிக் கொள்ளும் பதைபதைக்கும் சம்பவம் நடந்துள்ளது
![’வாழைப்பழ’ காமெடி பாணியில் நடந்த ’பீர் பாட்டில் சண்டை’... பீர் பாட்டிலால் தாக்கியதில் ஒருவர் கவலைக்கிடம் Two friends were beaten for a bottle of beer Someone was hospitalized ’வாழைப்பழ’ காமெடி பாணியில் நடந்த ’பீர் பாட்டில் சண்டை’... பீர் பாட்டிலால் தாக்கியதில் ஒருவர் கவலைக்கிடம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/05/392845ff2edf3dc1613e99ee9773f974_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கள்ளக்குறிச்சி மாவட்டம் வரதப்பனூர் அருகே உள்ள புக்கிரவாரி புதூர் பகுதியைச் சேர்ந்த கருப்பன் என்பவரின் மகன் ராஜா. நெல் அறுவடை இயந்திரத்தின் ஓட்டுநரான இவர் வரதப்பனூர் கிராமத்தில் உள்ள மதுபான கடையில் தனது நண்பர் ராமதுரை (எ) கோகுல் வயது மது அருந்தி உள்ளார். இருவரும் மதுபோதையில் இருந்த நிலையில் மேலும் குடிப்பதற்காக பீர் பாட்டில்களை வாங்கி உள்ளனர். இருவரும் வாங்கிய பீர் பாட்டில்கள் யாருடையது என்ற குழப்பம் ஏற்பட்ட நிலையில் நடுவே பீர் பாட்டில்களை வைத்து தகராற்றில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் ராஜா தன்னிடம் இருந்த ஒரு பீர் பாட்டிலை தரையில் போட்டு உடைத்ததுவிட அதைக்கண்ட கோகுல் தன்கையில் வைத்திருந்த மற்றொரு பீர் பாட்டிலை ராஜாவின் முகத்தில் ஓங்கி அடித்துள்ளார். இந்த சம்பவத்தில் ராஜா அங்கேயே சுருண்டு விழுந்து நினைவு இழந்துள்ளார். இதன்பிறகு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சில் பலத்த காயமடைந்த ராஜாவை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற
அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற ராஜா, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமான புகாரில் சின்னசேலம் காவல்துறையினர் ராஜாவை பீர் பாட்டிலால் தாக்கிய கோகுல் மீது நடவடிக்கை மேற்கொள்ள விசாரணை செய்து வருகின்றனர்.
மதுபோதையில் பீர் பாட்டிலைக் கொண்டு ராஜாவை, கோகுல் ஆகியோர் வன்முறையில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
மது பாட்டிலில் குழப்பம் - சினிமாவை மிஞ்சிய Beer Bottle சண்டை!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)