Pallavi Dey: லிவ் இன் ரிலேஷன்ஷிப்! சடலமாக மீட்கப்பட்ட பிரபல சீரியல் நடிகை! திரையுலகம் ஷாக்!!
பிரபல பெங்காலி சீரியல் நடிகை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்காலி சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை பல்லவி தேவ். இவர் குஞ்சோக்சயா, ரேஷம் ஹாபி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். இவர் கொல்கத்தாவின் ஹர்ஃபா பகுதியில் உள்ள குடியிருப்புப்பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் அவரது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட பல்லவி தேவை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள எம் ஆர் பங்கூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கிச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
View this post on Instagram
பின்னர் தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மருத்துவமனைக்கு வந்த போலீசார், பல்லவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையின்படி, பல்லவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள போலீசார், ''தற்போது விசாரணையின்படி தற்கொலையாக இருக்கலாம் என யூகிக்கிறோம். பிரேதபரிசோதனை முடிவு வந்தபிறகே உறுதியான தகவலை தெரிவிக்க முடியும் என்றனர்.
நடிகை பல்லவி, தெற்கு கொல்கத்தாவில் உள்ள குடியிருப்புப் பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் வாடகைக்கு தங்கி வந்துள்ளார். அவருடன் ஆண் நண்பரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் தங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகையுடன் தங்கி இருந்த ஆண் நண்பரான நக்னிக்கிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு வழங்கியதாக தெரிகிறது.
View this post on Instagram
இது குறித்து மீடியாவிடம் பேசிய சக்னிக்கின் தாயார், ''அவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் அப்படி ஒரே வீட்டில் தங்கி இருக்க எங்களுக்கு விருப்பம் இல்லை. திருமணம் செய்துகொண்டு ஒன்றாக இருக்க வேண்டுமென்று நான் கூறினேன். அவர்களுக்குள் பெரிய பிரச்சினை இல்லை. என்ன நடந்தது என தெரியவில்லை’’ என்றார். நடிகையின் தற்கொலை பெங்காலி திரையுலகையும், சின்னத்திரை உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகையின் மறைவுக்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்