மேலும் அறிய

Crime: டியூசன் படிக்க வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை... டீச்சரின் தந்தை போக்சோவில் கைது!

பாதிக்கப்பட்ட 11 மற்றும் 12 வயதுடைய சிறுமிகள் முன்னதாக டியூசன் ஆசிரியையின் தந்தையை அடையாளம் காண்பித்ததை அடுத்து, அந்நபர் கைது செய்யப்பட்டார்.

தனது மகளிடம் டியூசன் கற்க வந்த சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்தில் தனது பெண்ணிடம் டியூசன் கற்க வந்த சிறுமிகளிடம் முதியவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக அப்பகுதி காவல் துறையினருக்கு புகார் வந்தது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட 11 மற்றும் 12 வயதுடைய சிறுமிகள்  டியூசன் ஆசிரியையின் தந்தையை அடையாளம் காண்பித்ததை அடுத்து, அந்நபர் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்துப் பேசிய துர்க் மாவட்ட தலைமைக் காவல் கண்காணிப்பாளர் பிரதாப் குமார், "ஆசராம் பாபு நகரில் தனது மகள் வீட்டில் நடத்தும் டியூசன் வகுப்புகளுக்கு படிக்க வரும் 11,12 வயது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்கள் வந்ததை அடுத்து முதியவர் கைது செய்யப்பட்டார்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் “ஜமுல் பகுதியைச் சேர்ந்த பெண் ஆசிரியை தன் வீட்டில் குழந்தைகளுக்கு டியூசன் சொல்லிக் கொடுக்கிறார். அப்பகுதியைச் சேர்ந்த பல குழந்தைகள் அவரது டியூசனுக்கு செல்கிறார்கள். 

பாடம் எடுப்பதற்கு இடையே ஆசிரியை டியூசன் வீட்டுவேலை செய்யப் போகும்போது, ​​அவரது தந்தை ஷஹாதத் ஹுசைன், சாக்லேட் கொடுத்து சிறுமிகளை தனியே அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

முன்னதாக ஐந்தாம் வகுப்பு மாணவியிடம் அத்துமீறியபோது, ​​அந்தப் பெண் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் கொடுத்தார். இதற்குப் பிறகு, வேறு சில சிறுமிகளும் இந்த விஷயத்தை குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்" என்று கூறினார்.

இந்தச் சம்பவம் முன்னதாக வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, பல சிறுமிகளின் குடும்பத்தினர் ஜமுல் காவல் நிலையத்துக்கு வந்து ஷஹாதத் ஹுசைன் மீது புகார் அளித்துள்ளனர். மேலும் ஷஹாதத் ஹுசைனை கைது செய்ய வேண்டும் என்றும் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், பிரிவு 354 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போக்சோ சட்டம் : 

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர்.

18 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக இந்த போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் குறித்த தகவல்கள் பின்வருமாறு:

  • Penetrative sexual Assault - பலவந்தமான பாலியல் வன்கொடுமை செய்தல்
  • Aggravated penetrative sexual assault - தீவிரமான பாலியல் தாக்குதல்
  • Sexual Assault - பாலியல் தொல்லை
  • Aggravated Sexual Assault - எல்லைமீறிய பாலியல் தொல்லை
  • Sexual Harassment - பாலியல் தொந்தரவு
  • Taking pornographic pictures of children - குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்தல்

இந்த ஆறுவகை பாலியல் குற்றங்களும் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றனர்.

  • 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை
  • இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை
  • 12 வயதுக்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் - மரண தண்டனை (இந்த சட்டம் 2018ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது)

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் அதிரடி வேட்டை! இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்ட ரூ.1 கோடி மதிப்பு 100 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது
தஞ்சையில் அதிரடி வேட்டை! இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்ட ரூ.1 கோடி மதிப்பு 100 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுக்கு தொல்லை !! எச்சரிக்கை கொடுத்த கணவன் - என்ன நடந்தது ?
இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுக்கு தொல்லை !! எச்சரிக்கை கொடுத்த கணவன் - என்ன நடந்தது ?
அதிகாரிகளை மிரளச் செய்த ரேஷன் அரிசி கடத்தல்! லாரியுடன் அரிசி மூட்டைகள் பறிமுதல்.. ஒருவர் கைது.
அதிகாரிகளை மிரளச் செய்த ரேஷன் அரிசி கடத்தல்! லாரியுடன் அரிசி மூட்டைகள் பறிமுதல்.. ஒருவர் கைது.
ஈசிஆர் சாலையில் தொடர் ஆடு திருட்டு !! கறிக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் அதிரடி கைது
ஈசிஆர் சாலையில் தொடர் ஆடு திருட்டு !! கறிக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் அதிரடி கைது

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
Embed widget