மேலும் அறிய

" தினமும் குடிச்சா உன் பொண்டாட்டி எப்படி வருவா " கேள்வி கேட்ட முதியவருக்கு நேர்ந்த கொடூரம்

கல்வராயன் மலை அருகே, முதிய தம்பதியினரை அம்மிக்கல்லால் அடித்துக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞரை போலீசார் தர்மபுரியில் வைத்து கைது செய்தனர்

குடிபோதைக்கு அடிமையான நபர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் உள்ள களக்காடு அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி ( வயது 70 ) இவருக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள் இருந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு முதல் மனைவி காந்தி உயிரிழந்தார்.

பின்னர் ராமசாமி தனது இரண்டாவது மனைவியான பொன்னம்மாள் ( வயது 67 ) என்பவருடன் காட்டுக்கொட்டை பகுதியில் தனியாக தங்கி வாழ்ந்து வந்தனர். ராமசாமியின் முதல் மனைவியின் மகன் குப்புசாமிக்கு ஒரு மகள் உள்ள நிலையில் குப்புசாமி கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். எனவே பேத்தி மேகலாவை ராமசாமி வளர்த்து பெருக்கஞ்செடி கிராமத்தைச் சேர்ந்த சதிஷ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்.

ஒன்றாக சேர்ந்து இருக்க வற்புறுத்தல்

தொடக்கத்தில் மனைவி மீது பாசமாக இருந்த சதீஷ் நாளடைவில் குடிபோதைக்கு அடிமையாகி உள்ளார். பின்னர் தொடர்ந்து தினந்தோறும் குடித்து விட்டு வந்து மனைவி மேகலாவை அடித்து துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் விரக்தியடைந்த மேகலா கடந்த இரண்டு வருடங்களாக சதீஷை பிரிந்து தனது தாத்தா பாட்டியுடன் வசித்து வந்திருக்கிறார். ஆனால் சதீஷ் விடாமல் மேகலாவை போனில் தொடர்பு கொண்டும், நேரில் சந்தித்தும் தன்னுடன் வாழ வேண்டும் என வற்புறுத்தி வந்திருக்கிறார்.

" தினமும் குடிச்சிட்டு வந்தா உன் பொண்டாட்டி எப்படி உன் கூட குடும்பம் நடத்துவா "

இதற்கிடையில் கடந்த ஒரு வருடமாக மேகலா திருப்பூரில் தங்கி அங்குள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 24 - ம் தேதி மனைவியை தேடி அவரது தாத்தா ராமசாமி வீட்டிற்கு சென்ற சதீஷ் மேகலாவை பற்றி தகவல் கேட்டு முதிய தம்பதியினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

அப்போது ராமசாமி தினமும் குடிச்சிட்டு வந்த உன் பொண்டாட்டி எப்படி உன் கூட குடும்பம் நடத்துவா  என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் அங்கிருந்த அம்மிக்கல்லை பயன்படுத்தி ராமசாமி மற்றும் அவரது மனைவி பொன்னம்மாளை தலையில் அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளார்.

விரக்தியில் அம்மிக்கல் போட்டு கொலை

இந்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரியாலூர் காவல் ஆய்வாளர் பாலமுரளி இருவரின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக் குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வயது முதிர்ந்த தம்பதியினரை அம்மிக்கல்லை தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய குற்றவாளி சதீஷை கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக சேலம், கெங்கவல்லி, கருமந்துறை, ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் போலீசார் சல்லடை போட்டு தேடி வந்தனர்.

அப்போது சதீஷ் தர்மபுரி மாவட்டத்தில் தங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தர்மபுரி சென்ற காவல் துறையினர் சதீஷை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

தலைப்பு செய்திகள்

Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
சபாநாயகர் முதல் எம்.எல்.ஏ. வரை.. தவெகவில் சீட் வாங்கிய கதையை எடுத்து விட்ட ஆனந்த்!
சபாநாயகர் முதல் எம்.எல்.ஏ. வரை.. தவெகவில் சீட் வாங்கிய கதையை எடுத்து விட்ட ஆனந்த்!
திருவான்மியூர் முதல் உத்தண்டி.. கைவிடப்படுகிறதா ரூ.2,100 கோடி ECR மேம்பாலத் திட்டம்? பின்னணி என்ன?
திருவான்மியூர் முதல் உத்தண்டி! கைவிடப்படுகிறதா ரூ2100 கோடி ECR மேம்பாலத் திட்டம்? பின்னணி என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Embed widget