மேலும் அறிய

Crime: திருச்சியில் தொடரும் கொலை சம்பவம்- டாஸ்மாக் பாரில் வாலிபர் வெட்டிக்கொலை

திருச்சியை அடுத்துள்ள சமயபுரத்தில் டாஸ்மாக் பாரில் வாலிபர் வெட்டிக்கொலை வழக்கில் 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொலை, பழிக்குபழி கொலை சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிக அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க பல முறை காவல்துறைக்கு புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டாலும், எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் சமயபுரம் பகுதியில் உள்ள சில மதுபான கடைகளை அகற்றவேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை மனு கொடுத்தும் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தான் உண்மை எனவும் கூறுகின்றனர். இந்நிலையில்  திருச்சி மாவட்டம்,  சமயபுரம் அருகே உள்ள சேனியகல்லுக்குடியை சேர்ந்த மாரியப்பனின் மகன் பாபு (வயது 28). இவர் சமயபுரத்தில் உள்ள பூக்கடை ஒன்றில் மாலை கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் சமயபுரம் நால்ரோட்டில் டாஸ்மாக் கடை அருகே உள்ள ஒரு பாரில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு மது அருந்திய சமயபுரம் அருகே உள்ள வீ.துறையூரை சேர்ந்த சிலருக்கும், பாபுவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக பாபுவை வெட்டியது. இதில் உயிருக்கு போராடிய அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Crime: திருச்சியில் தொடரும் கொலை சம்பவம்- டாஸ்மாக் பாரில் வாலிபர் வெட்டிக்கொலை

இந்நிலையில் அவர்,  வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பாபுவிற்கும், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களை பணம் பெற்றுக்கொண்டு கோவிலுக்குள் அழைத்துச்செல்வதில் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. மேலும், இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சமயபுரம் பகுதியை சேர்ந்த 6 பேரை பிடித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில்தான், இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது முழுமையாக தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
Embed widget