மேலும் அறிய

திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் 5 கொள்ளையர்கள் கைது; 108 பவுன் நகைகள் பறிமுதல்

திருச்சி அருகே ஆயுதங்களுடன் 5 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 108 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி நெ.1 டோல்கேட் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரங்களில் பல்வேறு வீடுகளில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இதனால் கொள்ளிடம் போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் போலீஸ்காரர் அசோக் பட்டத்தம்மாள் தெரு பகுதியில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே காட்டு பகுதியில் நின்றிருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினார். அப்போது, அவர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்தோம். இயற்கை உபாதை கழிக்க வந்து இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் அவர்கள் கையில் இரும்பு கம்பி, திருப்புலி மற்றும் கையுறை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததை கவனித்த காவலர் அசோக், அவர்களை பிடித்தால் தன்னை தாக்கி விடுவார்கள் என எண்ணி 4 பேரிடமும் சாதுர்யமாக பேசி வெளிச்சம் நிறைந்த பகுதிக்கு அழைத்து வந்தார். பின்னர் இதுகுறித்து மற்ற இரவுநேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் விரைந்து வந்து 4 பேரையும் மடக்கி பிடித்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களை கைப்பற்றினர்.

திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் 5 கொள்ளையர்கள் கைது; 108 பவுன் நகைகள் பறிமுதல்

இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிச்சமுத்து மகன் கவுதம்பிரபு (வயது 27), பனமரத்துப்பட்டி தாலுகா, காந்தி நகர் 3-வது தெருவை சேர்ந்த பூபதி மகன் ஹரிஹரன் (19), கொண்டாலம்பட்டி, அழகுநகரை சேர்ந்த சின்னத்தம்பி மகன் விஜயகுமார் (20), நாமக்கல் மாவட்டம், மாணிக்கம்பாளையம் தாலுகா, சேருகலை பகுதியை சேர்ந்த அப்புசாமி மகன் பாலமுருகன் (32) என்றும், இவர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் 5 கொள்ளையர்கள் கைது; 108 பவுன் நகைகள் பறிமுதல்

மேலும் அவர்கள் பிச்சாண்டார்கோவில் ரயில்நிலையம் அருகே இருந்த ஒரு வீட்டில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற தயார் நிலையில் இருந்தபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதுகுறித்து 4 பேரின் மீது வழக்குப்பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தனித்தனியாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொள்ளையடித்த சம்பவங்கள் குறித்து வாக்குமூலம் அளித்தனர். பின்னர் போலீசார் அந்த 4 பேரையும் கைது செய்து அவர்கள் பதுக்கி வைத்து இருந்த திருட்டு நகைகள் 108 பவுனை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கொள்ளையில் தொடர்புடைய நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே பூலாங்காட்டூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் கனகராஜ் (33) என்பவரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget