Crime: கோடி கோடியா சம்பாதிக்கலாம்...ஆசை வார்த்தை கூறி ஒரு கோடி அபேஸ்...கணவன், மனைவி கைது
துபாயில் பணியாற்றி வந்த பாக்கியராஜிடம் ஏன் வெளிநாட்டில் கஷ்டப்படுகிறாய் நமது நாட்டிலேயே தொழில் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
நாட்றம்பள்ளி அருகே கோடி கோடியா சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி ரூபாய் ஒரு கோடியே 10 லட்சத்தை அபேஸ் செய்த கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் துபாயில் பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் அவரது உறவினர் முரளி காந்தி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது துபாயில் பணியாற்றி வந்த பாக்கியராஜ், ஏன் வெளிநாட்டில் கஷ்டப்படுகிறாய் நமது நாட்டிலேயே தொழில் செய்தால் அதிக லாபம் கிடைக்கும். எனவே டெக்ஸ்டைல்ஸ் பிசினஸ், மற்றும் கிரானைட் கல் பாலிஷ் செய்வது மற்றும் தொழிற்சாலை அமைக்க இடம் வாங்குதல் உள்ளிட்டவைகளை கூறி முதலீடு தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய பாக்கியராஜ் சிறியது சிறிதாக 2018ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை முரளி காந்தி வங்கி கணக்கில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் வரை போட்டுள்ளார்.
பின்னர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஊருக்கு வந்த பாக்கியராஜ் தொழில் எப்படி நடக்கிறது என்று குறித்து கேட்டபோது முரளி காந்தி தொழில் செய்யவில்லை என கூறியாதக தெரிகிறது
இதன் காரணமாகத்தான் ஏமாற்றப்பட்டது அறிந்த பாக்கியராஜ் 28.3.2022 அன்று நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைத்தனர்.
மாவட்ட குற்ற பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் விசாரணை செய்ததில் பாக்கியராஜ் ரூ.79 லட்சம் வங்கிக் கணக்கில் ட்ரான்ஸ்பர் செய்ததும் மீதி ரூ.21 லட்சம் கையில் கொடுக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்தது
பின்னர் மோசடியில் ஈடுபட்ட முரளி காந்தியை தேடி வந்தனர். அவர் குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் பதுங்கி இருப்பதாகவும் தற்போது அவருடைய தொலைபேசி எண்ணை சோதனை செய்து வந்ததில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லொகேஷன் காண்பித்ததை வைத்து கிருஷ்ணகிரியில் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இதற்கு உடந்தையாக இருந்த முரளி காந்தியின் மனைவியான சந்தியா (37) என்பவரையும் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்த 25 பவுன் தங்க நகைகளையும் போலீசார் மீட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவத்தில் உடந்தையாக இருந்த ஆறு பேரை போலீசார் தேடி வருகின்றனர்