மேலும் அறிய

போதைப் பொருள் தடுப்பு பிரிவு எஸ்.ஐ-க்கு அரிவாள் வெட்டு !! தப்பியோடிய ரவுடிக்கு வலைவீச்சு

மீஞ்சூர் அருகே பதுங்கியிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளியை பிடிக்க வந்த சென்னை தனிப்படை எஸ் - ஐக்கு சரமாரி அரிவாள் வெட்டு

செல்போன் சிக்னல் மூலம் கண்டுபிடித்த போலீசார்

சென்னை வில்லிவாக்கம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி பூபாலன் ( வயது 34) இவர் மீது சென்னை நகர காவல் நிலையங்களில் 10 - க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் , ஒரு வழக்கு தொடர்பாக தலை மறைவான பூபாலனை சென்னை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் , மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு பகுதியில் குற்ற வழக்கில் தலைமறைவான சரித்திர பதிவேடு குற்றவாளி பூபாலன் பதுங்கியிருப்பதை செல்போன் சிக்னல் மூலம் சென்னை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, போதைப் பொருள் தடுப்பு பிரிவு தனிப்படை உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் உள்பட 2 பேர், நள்ளிரவு மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு பகுதியில் ஒரு வீட்டுக்குள் பதுங்கியிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளியை பிடிக்க முயற்சித்தனர்.

போலீசாருக்கு அரிவாள் வெட்டு

வீட்டுக்குள் பதுங்கியிருந்த பூபாலனின் கூட்டாளிகள் , உதவி ஆய்வாளர் வெங்கடேஷின் தலையில் சரமாரி அரிவாளால் வெட்டி விட்டு , கண்ணிமைக்கும் நேரத்தில் பூபாலன் உள்பட அனைவரும் தப்பிச் சென்றுள்ளனர். தலையில் படுகாயம் அடைந்த உதவி ஆய்வாளர் வெங்கடேஷ், மீஞ்சூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இது குறித்து தகவலறிந்ததும் ஆவடி காவல் ஆணையரக ஆணையர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், இணை ஆணையர் சிவகுமார் மேற்பார்வையில், செங்குன்றம் துணை ஆணையர் மகேஸ்வரி தலைமையில் மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், சரித்திர பதிவேடு குற்றவாளியான பூபாலன் சமீபகாலமாக அத்திப்பட்டில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தது தெரிய வந்தது.

இதுபற்றி உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில் கொலை முயற்சி, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தாக்கியது, ஆயுதங்களால் தாக்கி கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்பட பல்வேறு குற்றப் பிரிவுகளில் மீஞ்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, தலைமறைவான சரித்திர பதிவேடு குற்றவாளி பூபாலன் மற்றும் அவரது கூட்டாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Chennai Bike Race: இனி ஓடவும் முடியாது.. ஒளியும் முடியாது! பைக் சாகசத்தில் ஈடுபட்டால் ஆப்பு தான்! சென்னை போலீசின் புதிய அஸ்திரம்!
Chennai Bike Race: இனி ஓடவும் முடியாது.. ஒளியும் முடியாது! பைக் சாகசத்தில் ஈடுபட்டால் ஆப்பு தான்! சென்னை போலீசின் புதிய அஸ்திரம்!
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
" திருமணம் மீறிய உறவு " கொலை செய்யப்பட்ட 9 வயது சிறுவன் !! நடந்தது என்ன ?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget