மேலும் அறிய

முத்துப்பேட்டை அருகே இளம்பெண்ணை கத்தியால் குத்தி தானும் தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு.

மதிவாணன் அதிராம்பட்டினத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி பள்ளிப் படித்துள்ளார். அவரது வீட்டின் அருகாமையிலேயே புவனேஸ்வரியின் வீடு இருந்துள்ளது. இருவரும் ஒன்றாகவே ஒரே பள்ளியில் படித்து உள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே இளம் பெண்ணை கத்தியால் குத்தி தானும் தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு. ஒரு தலை காதலா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கற்பகநாதர்குலத்தை சேர்ந்தவர் கண்ணன்- புவனேஸ்வரி (34) தம்பதி. இந்த தம்பதிக்கு 10 வயதில் ஹரீஸ் என்ற மகன் உள்ளார். கண்ணன் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் புவனேஸ்வரி கரியாங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று பள்ளி அலுவல் வேலை காரணமாக புவனேஸ்வரி முத்துப்பேட்டை சென்றுவிட்டு இரவு நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது புவனேஸ்வரியை பின்தொடர்ந்து வந்த முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடை மேலக்காடு பகுதியைச் சேர்ந்த மதிவாணன் வயது 36 என்பவர் கோபாலசமுத்திரம் விநாயகர் கோயில் அருகே புவனேஸ்வரியின் இரு சக்கர வாகனத்தின் மீது தனது வாகனத்தை மோதி உள்ளார். இதில் நிலை தடுமாறி புவனேஸ்வரி கீழே விழுந்துள்ளார். அப்போது மதிவாணன் மறைத்து வைத்திருந்த கத்தியால் புவனேஸ்வரியின் உடலில் மூன்று முறை குத்தியுள்ளார். அதன் பின்னர் தானும் தனது கையை கத்தியால் அறுத்துக்கொண்டு அங்கிருந்து ஓட முயன்றுள்ளார்.

முத்துப்பேட்டை அருகே இளம்பெண்ணை கத்தியால் குத்தி தானும் தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து மதிவாணனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதேபோல 108 ஆம்புலன்ஸ் மூலமாக புவனேஸ்வரியை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் புவனேஸ்வரி மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்யப்பட்ட மதிவாணன் போலீஸ் பாதுகாப்புடன் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக முத்துப்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. மதிவாணன் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். அவரது வீட்டின் அருகாமையிலேயே புவனேஸ்வரியின் வீடு இருந்துள்ளது. இருவரும் ஒன்றாகவே ஒரே பள்ளியில் படித்து உள்ளனர். அதன் பின்னர் அதிராம்பட்டினத்தில் உள்ள கல்லூரியில் ஒன்றாகப் படித்து உள்ளனர் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.


அதன் பின்னர் கல்லூரி படிப்பை முடித்து மதிவாணன் சொந்த ஊரான முத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடை மேலக்காடு பகுதிக்கு வந்துவிட்டார். இந்த நிலையில் அதே முத்துப்பேட்டை அருகே உள்ள கற்பகநாதர்குளம் பகுதியைச் சேர்ந்த கண்ணனுக்கு புவனேஸ்வரியை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்த நிலையில் ஒரு தலை காதல் விவகாரத்தால் இந்த கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றுள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 
அதே நேரத்தில் இருவரும் சிகிச்சையில் இருப்பதாலும், தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது இருப்பினும் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூட கூடிய இடத்தில் பெண்ணை கத்தியால் தாக்கிவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற நபரால் முத்துப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

நள்ளிரவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! மயிலாடுதுறை அருகே திமுக பிரமுகர் கொடூரக் கொலை - போலீஸ் குவிப்பு!
நள்ளிரவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! மயிலாடுதுறை அருகே திமுக பிரமுகர் கொடூரக் கொலை - போலீஸ் குவிப்பு!
ரீல்ஸ் மதுமிதா வீட்டில் நகைகளை கொள்ளையடித்தது ஏன்.? இது தான் காரணம்- திருடர்கள் பகீர் வாக்குமூலம்
ரீல்ஸ் மதுமிதா வீட்டில் நகைகளை கொள்ளையடித்தது ஏன்.? இது தான் காரணம்- திருடர்கள் பகீர் வாக்குமூலம்
என் காதலிக்கு ஆபாச மெசேஜா ? – மது ஊற்றிக் கொடுத்து நண்பனை கொன்று கிணற்றில் வீசிய காதலன்
என் காதலிக்கு ஆபாச மெசேஜா ? – மது ஊற்றிக் கொடுத்து நண்பனை கொன்று கிணற்றில் வீசிய காதலன்
"Please Help Me" — தங்கை அனுப்பிய லைவ் லொகேஷன் - அதிரடி காட்டிய போலீசார்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: அரசகுமார் மீதான குண்டாஸ் ரத்து ஏன்? தவெக அரசு கோட்டை விட்டது எங்கே? தொடரும் உள்ளடி வேலைகள்
அரசகுமார் மீதான குண்டாஸ் ரத்து ஏன்? தவெக அரசு கோட்டை விட்டது எங்கே? தொடரும் உள்ளடி வேலைகள்
ரீல்ஸ் மதுமிதா வீட்டில் நகைகளை கொள்ளையடித்தது ஏன்.? இது தான் காரணம்- திருடர்கள் பகீர் வாக்குமூலம்
ரீல்ஸ் மதுமிதா வீட்டில் நகைகளை கொள்ளையடித்தது ஏன்.? இது தான் காரணம்- திருடர்கள் பகீர் வாக்குமூலம்
Vadapalani Poonamallee metro train : வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ.! இந்த ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில் நிற்காது.? பயணிகளுக்கு ஷாக் நியூஸ்
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ.! இந்த ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில் நிற்காது.? பயணிகளுக்கு ஷாக் நியூஸ்
Virat -Anushka: கோலி-அனுஷ்காவின் ஒரே ஆர்டர்..! ரூ.18 லட்சம் கடனை அடைத்து, 4 கிளைகளை தொடங்கிய ஓட்டல்கார்
கோலி-அனுஷ்காவின் ஒரே ஆர்டர்..! ரூ.18 லட்சம் கடனை அடைத்து, 4 கிளைகளை தொடங்கிய ஓட்டல்கார்
Kolathur Market: ஸ்டாலின் பார்த்து பார்த்து கட்டிய வர்த்தக மையத்திற்கு மூடு விழா..! ரூ.53 கோடி வீணா? வசதிகள் எங்கே?
ஸ்டாலின் பார்த்து பார்த்து கட்டிய வர்த்தக மையத்திற்கு மூடு விழா..! ரூ.53 கோடி வீணா? வசதிகள் எங்கே?
சொத்து வரி செலுத்த நாளை தான் Last Date.! மறந்துடாதீங்க- வீட்டில் இருந்தே ஈசியாக கட்ட வழிமுறை இதோ
சொத்து வரி செலுத்த நாளை தான் Last Date.! மறந்துடாதீங்க- வீட்டில் இருந்தே ஈசியாக கட்ட வழிமுறை இதோ..
Free Bicycle Scheme : பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்.! ஸ்டைலான இலவச சைக்கிள் - என்னென்ன சிறப்பம்சங்கள்? எப்போது கிடைக்கும்?
பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்.! ஸ்டைலான இலவச சைக்கிள் - என்னென்ன சிறப்பம்சங்கள்? எப்போது கிடைக்கும்?
TN Weather News: இன்று கனமழை இருக்கு..! 16 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று கனமழை இருக்கு..! 16 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget