மேலும் அறிய

மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி - பெண்ணின் மீது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார்

மலேசியா நாட்டிற்கு சென்ற நிலையில், அங்கு சோதனை செய்த அதிகாரிகள் விசா போலியானது என்பதை கண்டறிந்துள்ளனர். முரளி, ராஜ்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை பெற்று கொண்டு மோசடி செய்ததாக பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்தனர். 

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே கொட்டையூர் சர்வமான்யம் கிராமத்தை சேர்ந்தவர் முரளி (வயது 32). டிரைவரான இவருக்கு அனிதா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இதே ஊரை சேர்ந்த ராஜ்குமார் (40). இவருக்கு சுமதி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கொரடாச்சேரி அய்யம்பேட்டை லெட்சுமணன் (49) இவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கொரடாச்சேரி வெள்ளமதகு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (40). இவர்கள் 4 பேரையும் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைப்பதாக கூறி கொரடாச்சேரி பத்தூர் பனங்கரையை சேர்ந்த அழகேசன் என்பவரது மனைவி பாமா (வயது 40) என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் பணம் வாங்கியுள்ளார். இதில் முரளியிடம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும், ராஜ்குமாரிடம் ரூ.1 லட்சமும், லெட்சுமணன் என்பவரிடம் ரூ.80 ஆயிரமும், ரமேஷிடமிருந்து ரூ.90 ஆயிரமும் என ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை வாங்கியுள்ளார். இந்நிலையில் முரளி, ராஜ்குமார் ஆகிய இருவருக்கும் மலேசியா நாட்டிற்கான டிக்கெட், அங்கு வேலை செய்வதற்கான விசாவை பாமா கொடுத்துள்ளார்.


மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி - பெண்ணின் மீது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார்

இதனை பெற்று கொண்டு இருவரும் மலேசியா நாட்டிற்கு சென்ற நிலையில், அங்கு சோதனை செய்த அதிகாரிகள் விசா போலியானது என்பதை கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து முரளி, ராஜ்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து, பின்னர் விடுவித்ததாக இருவரும் கூறுகின்றனர். இதனையடுத்து அவர்கள் மீண்டும் ஊருக்கு திரும்புள்ளனர். இதுகுறித்து பாமாவிடம் கேட்டதற்கு சரிவர பதில் அளிக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார். மேலும் லெட்சுமணன், ரமேஷ் இருவரையும் மலேசியா நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட முரளி, ராஜ்குமார், லெட்சுமணன், ரமேஷ் ஆகிய 4 பேரும் தனது குடும்பத்தினருடன்  திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அப்போது ஏற்கனவே கொரடாச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.


மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி - பெண்ணின் மீது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார்

மனுவை பெற்று கொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் வெளிநாட்டு அனுப்பி வைப்பதாக மோசடி புகார் குறித்து உடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். புகாருக்கு ஆளான பாமாவிடம் இது சம்பந்தமாக கேட்ட பொழுது, நான் நான்கு பேரையும் ஏமாற்றவில்லை அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கான உண்மையான டிக்கெட் மற்றும் விசா ஆகியவற்றை கொடுத்திருந்தேன். ஆனால் அவர்கள் வெளிநாட்டுக்குச் சென்று திரும்பி வந்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இருப்பினும் நான் ஒரிஜினல் விசா அவர்களுக்கு கொடுத்ததற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. ஆனால் அவர்கள் என்னை பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். அவர்கள் கொடுத்த பணத்தில் தான் நான் விசா மற்றும் டிக்கெட் எடுத்து கொடுத்தேன் என தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
Kia Sorento: மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
Hyundai Creta EV: விற்பனையில் சொதப்பிய க்ரேட்டா மின்சார எடிஷன்.. 60% பை-பேக் ஆஃபரை போட்ட ஹுண்டாய் - தேறுமா?
விற்பனையில் சொதப்பிய க்ரேட்டா மின்சார எடிஷன்.. 60% பை-பேக் ஆஃபரை போட்ட ஹுண்டாய் - தேறுமா?
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Embed widget