மேலும் அறிய

முத்துப்பேட்டையில் நிச்சயதார்த்த விழாவில் 38 பவுன் நகை மாயமான சம்பவத்தில் திடீர் திருப்பம்

சென்னையில் தங்கி இருந்த அறையை சோதனை செய்தபோது அறையில் பல்வேறு வசதிகளுடன் சொகுசாக இருந்துள்ளார். மேலும் அறையில் அங்கிருந்த முக்கிய பொருட்களை பார்த்து போலீசாரே அதர்ச்சியடைந்துள்ளனர்.

முத்துப்பேட்டையில் நடந்த நிச்சயதார்த்தம் விழாவில் 38 பவுன் நகை மாயமான சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. மணப்பெண்ணின் தோழியே திருடியது அம்பலமானது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் முகமது அலி மகன் முகமது ஆரிப்(53) இவரது மகளுக்கு கடந்த 18ந் தேதி திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் மணப்பெண்ணின் தோழிகள் உட்பட உறவினர்கள் பலரும் கலந்துக்கொண்டனர். இந்தநிலையில் நிகழ்ச்சி முடிந்து மாலை பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த மணப்பெண்ணின் கழுத்து மாலை, செயின், ஆரன், வளையல், மோதிரம் ஆகிய 38 பவுன் நகை மாயமாகி இருந்தது. இதனையடுத்து உறவினர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. இதையடுத்து முகமது ஆரிப் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையில் போலீசார் நேரில் விசாரணை நடத்தினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த முத்துப்பேட்டை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் மணப்பெண்ணின் தோழியான திருத்துறைப்பூண்டி மணலியை சேர்ந்த பாலு மகள் வினிதா(25) என்ற பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் போலீசார் விசாரணையில் எம்சிஏ படித்துள்ளார். இன்னும் திருமண ஆகவில்லை. பட்டதாரியான வினிதாவும் திருமண நிச்சயம் செய்யப்பட்ட முத்துப்பேட்டை மணப்பெனுண்டன் மன்னார்குடி தனியார் கல்லூரியில் படித்துள்ளனர். பின்னர் வினிதா படிப்பு முடிந்து சென்னையில் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

முத்துப்பேட்டையில் நிச்சயதார்த்த விழாவில் 38 பவுன் நகை மாயமான சம்பவத்தில் திடீர் திருப்பம்

தோழிக்கு திருமண நிச்சயதார்த்தம் அழைப்பு வந்ததும் கடந்த 18ந் தேதி சென்னையிலிருந்து முத்துப்பேட்டைக்கு வந்த வினிதா வீட்டில் உள்ள மாடியில் மணப்பெண்ணின் அறையில் தங்கியுள்ளார். அப்போது மணப்பெண் நகைகளை கலட்டி வைத்தபோது நோட்டமிட்டு வந்துள்ளார். பின்னர் தோழி மற்றும் உறவினர்களை கவனத்தை திசை திருப்பி அப்போதே நகைகளை திருடி வைத்துக்கொண்டு ஒன்றும் தெரியாத போன்று ஊர் செல்வதாக கூறி அன்று இரவு சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள நகை கடையில் பாதி நகையை விற்றுவிட்டு வேறு நகை வாங்கியுள்ளார். பின்னர் மன்னார்குடிக்கும் சொந்த ஊர் திருத்துறைப்பூண்டிக்கும் வந்து மற்ற நகைகளை விற்பனை செய்தது தற்போது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பிடிப்பட்ட வினிதா சென்னையில் தங்கி இருந்த அறையை சோதனை செய்தபோது அறையில் பல்வேறு வசதிகளுடன் சொகுசாக இருந்துள்ளார். மேலும் அறையில் அங்கிருந்த முக்கிய பொருட்களை பார்த்து போலீசாரே அதர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் சிலர் தொடர்பு உள்ளதால் அவர்களையும் பிடிக்க போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இதுகுறித்து பிடிப்பட்ட வினிதாவிடம் போலீசார் தொடர்ச்சியாக துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.  

முத்துப்பேட்டையில் நிச்சயதார்த்த விழாவில் 38 பவுன் நகை மாயமான சம்பவத்தில் திடீர் திருப்பம்

இந்தநிலையில் தோழி வீட்டிலேயே பட்டதாரி பெண் ஒருவர் திருடிய சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  சம்பவம் நடைபெற்று 10 நாட்களில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற வீட்டில் இருந்து 38 சவரன் தங்க நகைகள் திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளது மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் சம்பந்தப்பட்ட காவலர்களை  பாராட்டியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகம் நடந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட நபர்களின் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை இதே போன்று காவல்துறையினர் விரைந்து கண்டுபிடித்து தர வேண்டுமென பொதுமக்கள் மாவட்ட காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
Embed widget