மேலும் அறிய

6 போலீசார் சஸ்பென்ட் ஆன விவகாரம்: மது கடத்த காரணமான இருவர் கைது!

ஊரடங்கு காலகட்டத்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்தபோது போலீஸாரால் பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் மூல காரணமாக இருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருத்துறைப்பூண்டி அருகே ஊரடங்கு காலகட்டத்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்தபோது போலீஸாரால் பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட விவகாரம்: 6 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பின்னர் இளைஞர்கள் 2 பேர் மீண்டும் கைது.
 
ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாத காலம் முழுவதும் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டு இருந்தது. இதன் காரணமாக மது பிரியர்கள் அண்டை மாநிலமான புதுச்சேரிக்கு சென்று அங்கு மது பாட்டில்களை வாங்கி வந்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விற்பனை செய்து வந்தனர். இதனை தடுக்கும் விதமாக காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து மது பாட்டில்களை கடத்தி வருபவர்களை கைது செய்து வந்தனர்.
 
இந்நிலையில் கடந்த மாதம் 4ம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் இருந்து இரண்டு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தின் மூலமாக தங்களது உடல் முழுவதும் மதுபான பாட்டில்களை கட்டிக்கொண்டு கடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி என்னுமிடத்தில் திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை மறைத்து காவல்துறையினர் சோதனை செய்த பொழுது, இரண்டு இளைஞர்களின் உடல் முழுவதும் வெளிமாநில மது பாட்டில்களை கட்டி கொண்டு கடத்தி வந்தது தெரியவந்தது.
 
அதனையடுத்து இரண்டு இளைஞர்களையும் காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதே நேரத்தில் அவர்கள் மீது எந்தவித வழக்கும் போடாமல் காவல்துறையினர் அவர்களை விடுவித்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் இரண்டு நபர்களிடம் சாலையில் நின்று விசாரணை செய்ததை அந்தப் பகுதியில் இருந்த சில நபர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டனர். இதுகுறித்து திருவாரூர் மாவட்ட எஸ்பி சீனிவாசனுக்கு புகார் சென்றதையடுத்து இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தியுள்ளார். விசாரணையில் சம்பவம் உண்மை எனவும் அதே நேரத்தில் வழக்குத் தொடுக்காமல் இருவரையும் காவல் துறையினர் விடுவித்தது உண்மை என தெரிய வந்ததையடுத்து, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி சீனிவாசன் தஞ்சை சரக டிஐஜி பர்வேஷ் குமாருக்கு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளார்.
 
அதனடிப்படையில் காவல்துறையினரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ஞானசுமதி, உதவி ஆய்வாளர் வரலட்சுமி, தலைமை காவலர்கள் சண்முகநாதன், ராஜா, முதல் நிலை காவலர்கள் பாரதிராஜன், விமலா, ஆகிய ஒரு காவல் நிலையத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்த காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இந்த நடவடிக்கை காவல் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
 
இந்த நிலையில் ஆறு காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதற்குப்பிறகு கடந்த மாதம் நான்காம் தேதி மதுபாட்டில்களை கடத்தி வந்த கோட்டூர் பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் மற்றும் கேசவன் ஆகிய இரண்டு இளைஞர்களையும் போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு மேற்கொண்டு சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

திருவொற்றியூரில் 6 வயது சிறுமிக்கு கொடூரம்... குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வேண்டும் – அன்புமணி ஆவேசம்
திருவொற்றியூரில் 6 வயது சிறுமிக்கு கொடூரம்... குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வேண்டும் – அன்புமணி ஆவேசம்
மயிலாடுதுறையில் கொடூர விபத்து: பொறியியல் கல்லூரி மாணவன் பலி - புதுமணத் தம்பதி உள்ளிட்ட மூவர் கவலைக்கிடம்!
மயிலாடுதுறையில் கொடூர விபத்து: பொறியியல் கல்லூரி மாணவன் பலி - புதுமணத் தம்பதி உள்ளிட்ட மூவர் கவலைக்கிடம்!
மனைவி கண்ணெதிரே பயங்கரம் !! நடுரோட்டில் வழிமறித்து கணவன் வெட்டிக் கொலை
மனைவி கண்ணெதிரே பயங்கரம் !! நடுரோட்டில் வழிமறித்து கணவன் வெட்டிக் கொலை
"என் பொண்டாட்டிய பாரு..." நண்பர்களிடம் லட்சக்கணக்கில் வசூல்: மயிலாடுதுறையில் ஒரு சைக்கோ கணவனின் கொடூரம்!

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Chennai Power Cut: சென்னை மக்களே.! வியாழகிழமை (08.10.2026) எந்தெந்த ஏரியால மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
சென்னை மக்களே.! வியாழகிழமை (08.10.2026) எந்தெந்த ஏரியால மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
Embed widget