மேலும் அறிய

திருவண்ணாமலை : ’திருடிட்டு ஊர் சுத்துவேன்..வேலைசெய்ய புடிக்காது’ பாமக இளைஞரணி செயலாளரின் திடுக் ஸ்டேட்மெண்ட்..!

பெரணமல்லூர் பகுதியில் அரசு ஊழியர் வீட்டில் திருடிய பாமக இளைஞரணி செயலாளரை காவல்துறையினர் கைதுசெய்தனர். சொகுசான வாழ்கைக்கு திருடுவேன் என விசாரணையில் கூறியுள்ளார்

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் பகுதி அன்மருதை கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம் வயது (69). இவர் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் . இவர் கடந்த 25-ஆம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு குடும்பத்துடன் சென்றார். பின்னர் திருமணம் முடிந்து 26-ஆம் தேதி அனைவரும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டின் உள்ளே சென்று அறையில் சென்று பார்த்தார். அப்போது இரும்பு பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த கோயிலுக்கு சொந்தமான 4 சவரன் நகைகள் உட்பட மொத்தம் 10 சவரன் நகைகள், வெள்ளிப் பொருட்கள் திருடு போனதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 

திருவண்ணாமலை : ’திருடிட்டு ஊர் சுத்துவேன்..வேலைசெய்ய புடிக்காது’ பாமக இளைஞரணி செயலாளரின் திடுக் ஸ்டேட்மெண்ட்..!

இதுகுறித்து முனிரத்தினம் பெரணமல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆய்வாளர் கோமளவள்ளி மற்றும் கைரேகை நிபுணர்கள், காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பீரோ உள்ளிட இடங்களில் கைரேகை நிபுணர்கள் கைரேகையை சேகரித்தும் பின்னர் வீட்டின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். திருடுபோன இடத்தில் சேகரித்த கைரேகையும் மற்றும் சிசிடிவி காட்சியில் பதிவான நபரும் அதே பகுதியை சேர்ந்த பாமக மாவட்ட இளைஞரணி செயலாளர் ராதாகிருஷ்ணன் (38) என்பவருடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்தான் முனிரத்தினம் வீட்டில் நகைகளை திருடி சென்றார் என்பது உறுதிசெய்யப்பட்டது

திருவண்ணாமலை : ’திருடிட்டு ஊர் சுத்துவேன்..வேலைசெய்ய புடிக்காது’ பாமக இளைஞரணி செயலாளரின் திடுக் ஸ்டேட்மெண்ட்..!

அதனைத்தொடர்ந்து 5 பேர்கொண்ட தனிப்படை ஒன்று அமைத்து பாமக நிர்வாகியை தேடிவந்தனர். இந்நிலையில் பாமக நிர்வாகி ராதாகிருஷ்ணனை  தனிப்படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் நகைகளை எனது விவசாய நிலத்தில் உள்ள பம்பு செட்டில் வைத்துள்ளேன் என்று சொன்னதாக தெரியவருகிறது. பின்னர் அங்கிருந்து 10 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் மீட்டு, காவல்நிலையத்திற்கு அழைத்துச் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ”இதுபோல மூன்று வீடுகளில் திருடினேன், அதனை வைத்து ஆடம்பரமா ஊர் சுத்துவேன் என்றும், எனக்கு வேலைக்கு போவது பிடிக்காது” என்றும் கூறியுள்ளார். 

அதன்பிறகு அவரை செய்யாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தி போளூர் சிறையில் அடைத்தனர். கைதான ராதாகிருஷ்ணன் கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி சார்பில் மேலானூர் ஒன்றிய கவுன்சிலராக போட்டியிட்டு தோல்வியடைந்தவர். வீடு புகுந்து நகை திருடிய வழக்கில் பாமக நிர்வாகி கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?

Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி

Nirmala Sitharaman: ”தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறிப்பு” - நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவு

ENG Vs AUS ODI: உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை பொட்டலம் கட்டிய இங்கிலாந்து - 126 ரன்களுக்கு ஆல்-அவுட், அபார வெற்றி

ABP Premium

வீடியோ

Thrissur ATM Robbery | GUNSHOT.. CHASING.. ஹரியானா கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? Namakkal ContainerThiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி
Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி
Nirmala Sitharaman: ”தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறிப்பு” - நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவு
Nirmala Sitharaman: ”தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறிப்பு” - நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவு
ENG Vs AUS ODI: உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை பொட்டலம் கட்டிய இங்கிலாந்து - 126 ரன்களுக்கு ஆல்-அவுட், அபார வெற்றி
ENG Vs AUS ODI: உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை பொட்டலம் கட்டிய இங்கிலாந்து - 126 ரன்களுக்கு ஆல்-அவுட், அபார வெற்றி
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!

Kanchipuram Traffic Diversion: காஞ்சிபுரம் வாகன ஓட்டிகளே உஷார்... திடீர் போக்குவரத்து மாற்றம்.. முழு தகவல் இங்கே ..

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு, கடவுளோடு விளையாடுகிறார் - மதுரையில் ரோஜா பேட்டி !

திருவிழாவில் ஏற்பட்ட முன் விரோதம்... 'டீ' வியாபாரியை வழிமறித்து வெட்டி படுகொலை...

Embed widget