மேலும் அறிய

திருவண்ணாமலையில் இழப்பீடு வழங்காததால் இரு அரசு பஸ்கள் ஜப்தி!

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 அரசு பேருந்துகளும், கோர்ட் உத்தரவுப்படி ஜப்தி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த சின்னகாலூர் கிராமத்தை சேர்ந்தவர் பாரதி மகன் பூங்காவனம் வயது (31). இவர் கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னைக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளார். சென்னை நந்தம்பாக்கம் அருகே சென்றபோது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த பூங்காவனம் சென்னை அரசுமருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.தொடர்ந்து, உரிய இழப்பீடு கேட்டு திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட நபருக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 4 லட்சத்து10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால், நீண்ட நாட்களாகியும் இழப்பீடு தொகை வழங்காததால் பூங்காவனம் மேல்முறையிடு செய்தார். அதனை விசாரித்த குற்றவியல் நீதிமன்றம், ஏற்கனவே வழங்க உத்தரவிட்ட தொகையுடன், வட்டியும் சேர்த்து இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையெனில் அரசு பேருந்தை ஜப்தி செய்ய வேண்டும் என கடந்த மாதம் 29ம் தேதி உத்தரவிட்டது.

திருவண்ணாமலையில் இழப்பீடு வழங்காததால் இரு அரசு பஸ்கள் ஜப்தி!

ஆனால், பாதிக்கப்பட்டவருக்கு இதுவரை இழப்பீடு தொகை வழங்காததால், கோர்ட் ஊழியர்கள்  திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருப்பத்தூர் மார்கமாக செல்லும் அரசு பேருந்தை ஜப்தி செய்து, நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர். இதேபோன்று, திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் பகுதியை சேர்ந்த விவசாயி வெங்கடாஜலம் வயது (43) என்பவர், கடந்த 2003ம் ஆண்டு ஜூலை மாதம் சோனாகுட்டை பகுதியில் இருந்து சாத்தனூர் செல்லும் அரசு பேருந்தில் சென்றுள்ளார். சாத்தனூர் அருகே வந்தபோது பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் வெங்கடாஜலம் உட்பட 20 நபர்கள்  படுகாயம் அடைந்தனர்.இதில் பாதிக்கப்பட்ட வெங்கடாஜலம் இழப்பீடு கேட்டு திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட நபருக்கு அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு தொகையாக 69 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

திருவண்ணாமலையில் இழப்பீடு வழங்காததால் இரு அரசு பஸ்கள் ஜப்தி!

ஆனால், நீண்ட நாட்களாகியும் இழப்பீடு வழங்காததால், இதுகுறித்து வெங்கடாஜலம் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிமன்றம், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு தொகை மற்றும் இதுநாள் வரை வட்டியுடன் சேர்த்து பாதிக்கப்பட்டவருக்கு 1.11 லட்சம் வழங்க வேண்டும். இல்லையெனில் அரசு பேருந்தை ஜப்தி செய்ய என கடந்த மாதம் 29ம் தேதி உத்தரவிட்டது.ஆனால், உரிய இழப்பீடு தொகை வழங்காததால்  கோர்ட் ஊழியர்கள் திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருச்சி செல்லும் அரசு பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் 2 பேருந்துகள் அடுத்தடுத்து ஜப்தி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்பு செய்திகள்

பெட்ரோல் பைக்குக்கு மாற்றாக வந்த எலக்ட்ரிக் பைக் உண்மையிலேயே பாதுகாப்பானதா? மயிலாடுதுறை சம்பவத்தால் மீண்டும் எழும் கேள்விகள்!
பெட்ரோல் பைக்குக்கு மாற்றாக வந்த எலக்ட்ரிக் பைக் உண்மையிலேயே பாதுகாப்பானதா? மயிலாடுதுறை சம்பவத்தால் மீண்டும் எழும் கேள்விகள்!
கனடா வானில் பறந்த கனவு... தரையில் நொறுங்கிய விமானம்! தமிழக, புதுச்சேரியை சேர்ந்த 2 விமானிகள் பலி
கனடா வானில் பறந்த கனவு... தரையில் நொறுங்கிய விமானம்! தமிழக, புதுச்சேரியை சேர்ந்த 2 விமானிகள் பலி
சென்னை சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: வழக்கை மூடிமறைக்க முயற்சி? அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!
சென்னை சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: வழக்கை மூடிமறைக்க முயற்சி? அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!
" யார்கிட்டயாவது சொன்னா கொன்னுருவேன் " - பெற்ற மகளிடம் பாலியல் அத்துமீறிய தந்தை

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CTR Nirmal Kumar:
CTR Nirmal Kumar: "மக்கள் விஜய்யை நம்புறாங்க.. விஜய் மக்களை நம்புறாரு.. 100 தேர்தலைக்கூட பாப்போம்" - அமைச்சர் நிர்மல்குமார்
ADMK:
ADMK: "வீட்டுக்காரர்களை முருங்கைக்கீரையிலே குளிப்பாட்டுங்க.." டபுள் மீனிங்கில் ஓட்டு கேட்ட அதிமுக!
GEM Veeramani: ஜெம் வீரமணி வழக்கு; வாயையே திறக்காத அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள் - விட்டு விளாசும் நெட்டிசன்கள்!
GEM Veeramani: ஜெம் வீரமணி வழக்கு; வாயையே திறக்காத அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள் - விட்டு விளாசும் நெட்டிசன்கள்!
ஸ்டைல் + கம்பீரம்.. கொரில்லா வீரன் போல போக Royal Enfield Guerrilla 450 - மைலேஜ், விலை எப்படி?
ஸ்டைல் + கம்பீரம்.. கொரில்லா வீரன் போல போக Royal Enfield Guerrilla 450 - மைலேஜ், விலை எப்படி?
Vellore Airport: வேலூர் விமான நிலையம் திறப்பு எப்போது? அடுத்த மாதம் திறக்கப்படலாம்... பிரதமர் மோடி வருகையில் முக்கிய நிகழ்வு
Vellore Airport: வேலூர் விமான நிலையம் திறப்பு எப்போது? அடுத்த மாதம் திறக்கப்படலாம்... பிரதமர் மோடி வருகையில் முக்கிய நிகழ்வு
’பங்கேற்கவில்லை ; வக்கில்லை’ டெங்கு பாதிப்பு குறித்து அமைச்சர் அருண்ராஜ் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி தாக்கு..!
’பங்கேற்கவில்லை ; வக்கில்லை’ டெங்கு பாதிப்பு குறித்து அமைச்சர் அருண்ராஜ் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி தாக்கு..!
’கொத்து கொத்தாக குவியும் டெங்கு நோயாளிகள்’ காணாமல் போன சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்..!
’கொத்து கொத்தாக குவியும் டெங்கு நோயாளிகள்’ காணாமல் போன சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்..!
Edappadi Palaniswami : தமிழ்நாட்டையே உலுக்கும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை’ வாயை திறக்காத எடப்பாடி பழனிசாமி..?
’தமிழ்நாட்டையே உலுக்கும் பாலியல் வன்கொடுமை’ வாயை திறக்காத எடப்பாடி பழனிசாமி..!
Embed widget