மேலும் அறிய
Advertisement
திருவள்ளூர் கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்: மாணவி ஏன் ஆசிரமத்தில் தங்கவைக்கப்பட்டார்?
பதினெட்டு மாதங்கள் தொடர்ந்து அந்தப் பெண்ணை பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் இக்கோவிலில் தங்க வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெள்ளாத்து கோட்டை கிராமம். இங்கு ஓடை ஓரம் அமைந்துள்ள கோவிலில் வைத்து முனுசாமி என்பவர் அருள்வாக்கு கூறிவருகிறார். இவரிடம் தாமரைபாக்கத்தை அடுத்த கொமக்கமேடு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் ஹேமமாலினி (வயது 20). இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிகாம் படித்து வருகிறார். கடந்த 18 மாதங்களாக ஆவி, பேய், பிசாசு உள்ளிட்ட சேட்டையால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் உறவினர்களால், அந்த கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அமாவசை மற்றும் பௌர்ணமி நாட்களில் அடிக்கடி இக்கோவிலில் அப்பெண்ணை தங்க வைத்து பூஜை செய்து வந்துள்ளனர்.
கோவில் பூசாரி முனுசாமி வீட்டில் அவரது மனைவியுடன் தங்கி பூஜை செய்து வந்தார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹேமாமாலினி தனது பெரியம்மா இந்திராணி மற்றும் தங்கையுடன் கோவிலுக்குச் சென்று பூஜை செய்துள்ளார். இரவு பூஜை முடிந்து நள்ளிரவு பூசாரி முனுசாமியின் மனைவியுடன் தூங்கச் செல்வதற்கு முன்பு ஹேமமாலினிக்கு தேங்காய் பூசணிக்காய் எலுமிச்சம்பழம் சுற்றி திருஷ்டி கழித்து உள்ளனர். பின்னர் இரவு ஹேமமாலினி உடன் வந்த அவரது தங்கை உள்ளிட்ட நான்கு பெண்கள் கோவில் பூசாரி முனுசாமிக்கு இட்லி தோசை சமைத்து கொடுத்ததுடன் பரிமாறி பணிவிடை செய்து உள்ளனர்.
பூசாரி முனுசாமியின் அறையில் ஹேமாமாலினி மற்றும் அவரது தங்கை படுத்து தூங்கி உள்ளனர். இவர்களுடன் வந்த பெரியம்மா இந்திராணி அங்குள்ள அம்மன் கோவில் மண்டபத்தில் கோவிலுக்கு வந்திருந்தவர்களுடன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அதிகாலை ஹேமமாலினி திடீரென விஷம் குடித்து வாந்தி எடுத்து மயங்கி பேச்சு மூச்சின்றி உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார்.கோவில் பூசாரி முனுசாமியின் தரப்பில் அவரது மனைவி மட்டும் எழுந்து வந்து மண்டபத்தில் உறங்கிக்கொண்டிருந்த ஹேமமாலினியின் பெரியம்மா இந்திராணியை எழுப்பி கூறியுள்ளார்.
'
பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து 108 ஆம்புலன்ஸுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளானர். உயிருக்கு போராடியவரை ஆபத்தான நிலையில் 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வெங்கல் கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்து இரண்டு மணி நேரம் கழித்து திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். இந்நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த கல்லூரி மாணவி ஹேமாமாலினி சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் பூசாரியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எவ்வித அனுமதியும் இன்றி கோவிலில் இளம்பெண்களை தங்க வைக்க அனுமதி வழங்கியது யார், 18 மாதங்களாக தொடர்ந்து அந்த பூசாரியை நம்பி எப்படி அந்தப் பெண்ணைப் பெற்றவர்கள் அனுப்பியது ஏன்? மாணவியை தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்க்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தஞ்சாவூர்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion