கருப்பு ஏலக்காய் தெரியுமா? அதை வீட்டில் எப்படி வளர்ப்பது?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pixabay

பெரிய ஏலக்காய்களை கருப்பு ஏலக்காய் என்று அழைப்பர். இவற்றை உலர்த்தி, அவற்றின் பழங்கள் மற்றும் விதைகளை சமையலில் பயன்படுத்துகிறார்கள்.

Image Source: pixabay

இவற்றை வீட்டில் வளர்க்க விரும்பினால் நல்ல தரமான பெரிய ஏலக்காய்களைத் தேர்ந்தெடுத்து 24 மணி நேரம் வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்க வேண்டும்.

Image Source: pixabay

பத்து முதல் பன்னிரண்டு அங்குல ஆழம் கொண்ட, தண்ணீர் வடிவதற்கு நல்ல வசதி கொண்ட தொட்டியைத் தேர்ந்தெடுக்கவும். ஏனெனில் இந்த செடியின் வேர்கள் ஆழமாக வளராது.

Image Source: pixabay

50% வளமான மண் 30% உரம் அல்லது மாட்டு எரு, 20% தேங்காய் நார் அல்லது மணல் சேர்த்து ஒரு கலவையை தயார் செய்யுங்கள்.

Image Source: pixabay

விதைகளை மண்ணில் 1–2 சென்டிமீட்டர் ஆழத்தில் நடவும். அவற்றை மண்ணால் மூடவும்.

Image Source: pixabay

விதைத்தபின் மண்ணில் ஈரப்பதம் இருக்குமாறு மண்ணின் மேல் சிறிது தண்ணீர் தெளிக்கவும்.

Image Source: pixabay

தொட்டியை காலை இளஞ்சூரிய ஒளி படும்படி வைக்கவும். ஏனெனில் இந்தச் செடி நிழலை விரும்பும்.

Image Source: pixabay

விதை முளைப்பதற்கு 30 முதல் 40 நாட்கள் ஆகலாம். ஒவ்வொரு 20–25 நாட்களுக்கும் இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் சேர்ப்பது நன்றாக வளர உதவும்.

Image Source: pixabay

செடிக்கு ஈரப்பதம் தொடர்ந்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். செடி 2–3 வருடங்களில் ஏலக்காய் கொடுக்க ஆரம்பிக்கும்.

Image Source: pixabay