மேலும் அறிய

காணாமல் போன இளைஞர் கொடூரக் கொலை! அதிர்ச்சியில் உறைந்த ஊர் மக்கள், பதற்றத்தில் தேனி காவல்துறை

வீரப்பாண்டி காவல் நிலையத்தில் நவீன் குமாரின் தாயார் அக்டோபர் 8 ஆம் தேதி தனது மகனை காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார்.

தேனி மாவட்டம், உப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி - ஜெயலட்சுமி தம்பதியினர். இவர்களது மகன் 25 வயதான நவீன் குமார், செல்போன் கடையில் வேலை பார்துவந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி நண்பருடன் வெளியே சென்ற நவீன் குமார், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது பெற்றோரும் உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால், எங்கு தேடியும் நவீன் குமார் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து வீரப்பாண்டி காவல் நிலையத்தில் நவீன் குமாரின் தாயார் அக்டோபர் 8 ஆம் தேதி தனது மகனை காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார்.



காணாமல் போன இளைஞர் கொடூரக் கொலை! அதிர்ச்சியில் உறைந்த ஊர் மக்கள், பதற்றத்தில் தேனி காவல்துறை

அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால், புகார் அளித்து 5 நாட்களுக்கு மேலாகியும், நவீன் குமாரை கண்டுபிடிக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாக குடும்பத்தினர் வேதனை தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் நவீன் குமாரை அழைத்து சென்ற அவரது நண்பரை பிடித்து விசாரித்தனர். அதில் அந்த நபர் அதிர்ச்சி தகவல அளித்துள்ளர். மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக நவீன்குமாரை கொலை செய்து ஆற்றியில் வீசியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆற்றில் வீசப்பட்ட நவீன் குமாரின் உடலை தேடுவதற்கு காவல்துறையினர் தீயணைப்பு துறையின் உதவியை நாடினர். பின்னர் அவர்களுடன் சேர்ந்து காவல்துறையினரும் நவீன்குமாரின் உடலை தேடிவந்தனர்.  இந்த தகவல் நவீன்குமார் பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு தெரியவர, ஆத்திரமடைந்த அவர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 


காணாமல் போன இளைஞர் கொடூரக் கொலை! அதிர்ச்சியில் உறைந்த ஊர் மக்கள், பதற்றத்தில் தேனி காவல்துறை

பின்னர், நவீன் குமாரின் உடலை கண்டுபிடித்து, அவரை கொலை செய்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தேனி டி.எஸ்.பி. முத்துக்குமார் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், உடலை கண்டுபிடித்து கொலை செய்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து, ஆற்றில் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட நவீன் குமாரின் உடலைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் நான்கு மணி நேரத் தேடுதலுக்குப் பின், உப்புக்கோட்டை கருப்புசாமி கோயில் அருகே உள்ள ஆற்றின் ஓரத்தில் உடலை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக உடல் தேனி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. உடலைக் கண்ட பொதுமக்களும் உறவினர்களும் கதறி அழுதனர். இதனால், உப்புக்கோட்டை கிராமத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

" மனைவியின் Whats app , instagram சாட் " அதிர்ந்து போன கணவன் !! ஏன் எதற்காக ?
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 
" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget