மேலும் அறிய

தேனியில் பால் வியாபாரி படுகொலை! அதிர்ச்சி தரும் காரணம்

பால்வியாபாரி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட உள்ளூரை சேர்ந்த 5 பேர் கைது. ரேக்ளா பந்தயத்தில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கொலை நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் பால் வியாபாரியை சுற்றி வளைத்த கும்பல், சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். 

தேனியில் பால் வியாபாரி படுகொலை! அதிர்ச்சி தரும் காரணம்

தேனி மாவட்டம் கம்பம் ஜல்லிக்கட்டு தெருவை சேர்ந்த 27 வயதாகும் இளம்பரிதி என்பவர் பால் வியாபாரி ஆவார். இவருக்கு திருமணமாகி 23 வயதில் சவுமியா என்ற மனைவியும், 4 வயதில் தேஜாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். இந்தநிலையில் இளம்பரிதி டீ குடிப்பதற்காக தனது வீட்டில் இருந்து கம்பம் விவேகானந்தர் 1-வது தெருவில் உள்ள டீக்கடைக்கு சென்றுள்ளார். அங்கு டீ குடித்துவிட்டு அவர் வெளியே வந்திருக்கிறார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்து ஏற்கனவே காத்துக் கொண்டிருந்தது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள், இளம்பரிதியை சுற்றி வளைத்தார்கள். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் இளம்பரிதியை சரமாரியாக தாக்கினார்கள். இதனை பார்த்ததும் அங்கிருந்த பலரும் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த கம்பம் ஊத்துக்காடு பிரிவு பகுதியை சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளியான 58 வயதாகும் ஈஸ்வரன் என்பவர் துணிச்சலாக செயல்பட்டு, இளம்பரிதியை வெட்டிய கும்பலை தடுக்க முயன்றார். அப்போது அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஈஸ்வரனையும் வெட்டிவிட்டு, தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர். சினிமா காட்சிகளில் வருவது போன்று சில நிமிடங்களில் இந்த சம்பவம் நடந்தது. அரிவாள் வெட்டில் இளம்பரிதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஈஸ்வரன் காயத்துடன் உயிருக்கு போராடினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கம்பம் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயமடைந்த ஈஸ்வரனை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் இளம்பரிதியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தேனியில் பால் வியாபாரி படுகொலை! அதிர்ச்சி தரும் காரணம்

இதற்கிடையே கம்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட இளம்பரிதியின் உடல், அங்கிருந்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை அறிந்ததும் கம்பம் அரசு மருத்துவமனை முன்பு இளம்பரிதியின் உறவினர்கள் திரண்டனர். பின்னர் உடலை மாற்றியது எதற்காக என்று கேள்வி எழுப்பி கோஷமிட்டனர். மேலும் இளம்பரிதியை கொலை செய்த குற்றவாளிகளை விரைந்து பிடித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த மறியல் போராட்டம் இரவு வரை நடந்தது. இந்த கொலை குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்தவர்களை தேடி வந்தனர்.

தேனியில் பால் வியாபாரி படுகொலை! அதிர்ச்சி தரும் காரணம்

மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இளம்பரிதி ரேக்ளா பந்தய போட்டியில் கலந்து கொள்பவர் ரேக்ளா பந்தய போட்டியில் அவர் பலமுறை வெற்றி பெற்றுள்ளார். இதனால் ரேக்ளா பந்தய போட்டியின் காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தால் அவர் கொலை செய்யப்பட்டு  இருந்தது தெரியவந்தது. வழக்குப் பதிவு செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய நிலையில், உலகத்தேவர் தெருவைச் சேர்ந்த விஜய் (24), தென்னவன் (26), ரவிதர்மா (28), புதுப்பட்டியைச் சேர்ந்த டோப்பு பாலா (23), ஜனார்த்தனன் (21) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரேக்ளா ரேஸ் போட்டியில் இளம்பருதி உடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளதை போலீசார் கண்டறிந்தனர். பின்னர், கைதான 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget