மேலும் அறிய

Crime: குப்பை கொட்டுவதில் தகராறு.... தட்டிக்கேட்ட தொழிலாளி அடித்துக் கொலை.. தேனியில் பயங்கரம்..!

தேனி அருகே குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறை தட்டிக்கேட்ட தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல் செய்தனர்.

தேனி அருகே பூதிப்புரம் கோட்டைமேட்டு தெருவை சேர்ந்தவர் மகேந்திரகுமார் (வயது 55). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (40). மாட்டு வியாபாரி. இவருக்கும், அப்பகுதியை சேர்ந்த மற்றொருவருக்கும் வீட்டு முன்பு குப்பை கொட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக சென்ற மகேந்திரகுமார், ராதாகிருஷ்ணனை தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது.

தேனி : ஆதரவாளர்களை பெருக்கும் ஓபிஎஸ்.. அடுத்த கட்ட நகர்வு என்ன?

Crime: குப்பை கொட்டுவதில் தகராறு.... தட்டிக்கேட்ட தொழிலாளி அடித்துக் கொலை.. தேனியில் பயங்கரம்..!

இதனால், ராதாகிருஷ்ணன் மற்றும் சிலர் மகேந்திரகுமாரிடம் தகராறு செய்து அவரை கட்டையால் தாக்கினர். அதை தடுக்க வந்த மகேந்திரகுமாரின் மனைவி வாசுகி (50), மகள் ஜனனி (20), தம்பி நாகராஜ், தங்கை ராமதிலகம் ஆகியோரையும் அவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த 5 பேரும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மகேந்திரகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

’முல்லைப் பெரியாறு’ குறித்து வீடியோ வெளியிட்ட நபர்கள் மீது கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார்

Crime: குப்பை கொட்டுவதில் தகராறு.... தட்டிக்கேட்ட தொழிலாளி அடித்துக் கொலை.. தேனியில் பயங்கரம்..!

இந்த சம்பவத்தை தொடர்ந்து,  கொலையாளிகளை கைது செய்யக்கோரி, மகேந்திரகுமாரின் உறவினர்கள் பூதிப்புரம் பெருமாள் கோவில் முன்பு தேனி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பால்சுதிர், பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் கொலையாளிகள் அனைவரையும் கைது செய்யும் வரை மறியலை கைவிட மாட்டோம் என்று போராட்டத்தை தொடர்ந்தனர்.

Rohit Sharma : சச்சின், கோலியின் சாதனை பட்டியலில் இணைந்த ரோகித்... அப்படி என்ன சாதனை தெரியுமா..?

Crime: குப்பை கொட்டுவதில் தகராறு.... தட்டிக்கேட்ட தொழிலாளி அடித்துக் கொலை.. தேனியில் பயங்கரம்..!

இதற்கிடையே கொலையாளிகளை பிடிக்க பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட தகவலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் தெரிவித்ததோடு, மற்றவர்களை துரிதமாக கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து பூதிப்புரத்தில் பாதுகாப்பு பணிக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget