மேலும் அறிய

தனியாக வசிக்கும் பெண்ணை உடலுறவுக்கு அழைத்த இளைஞர் தனது மனைவி உடன் கைது

அந்தப் பெண்ணிடம் உன்னை நிர்வாணமாக பார்ப்பதற்கு எனக்கு ஆசையாக உள்ளது. ஆகவே நீ நிர்வாணமாக எனக்கு வீடியோ கால் செய்ய வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் 30 வயதுடைய பெண் ஒருவர் 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். அவருடைய கணவருக்கு  இங்கு அவருக்கு போதிய  வேலைவாய்ப்பின்றி போகவே குடும்பத்தைக்காப்பாற்ற அவர்  வெளிநாட்டில் வேலை செய்து  வருகிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணின் வீட்டிற்கு அவரது உறவுக்காரரான சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (30) என்பவர் தனது திருமணத்திற்காக அழைப்பிதழ் கொடுப்பதற்காக பெண் வசிக்கும் கிராமத்திற்கு  வந்துள்ளார். அழைப்பிதழ் கொடுக்க வந்தவர் காதல் வலை வீசும் நோக்கத்தில் கணவர் இல்லாமல் தனியாக இருந்த பெண்ணிடம் அன்பை பொழிந்து  அந்த பெண்ணின் செல்போன் நம்பரை வாங்கி சென்று அவரிடம் அடிக்கடி நலம் விசாரித்து பேசி பழகி வந்துள்ளார். அந்தப்பெண்ணும் இவரது வர்ணனையில் மயங்கி  தனக்கு கணவர் இருப்பதை மறந்து அவரது பேச்சில்  சொக்கிப்போயுள்ளார்.

தனியாக வசிக்கும் பெண்ணை உடலுறவுக்கு அழைத்த இளைஞர் தனது மனைவி உடன் கைது

இந்த நிலையில் ராஜ்குமாருக்கு  திருமணம் முடிந்து வெளிநாடு சென்று விட்டார். ஆனால் வெளிநாடு சென்றாலும் கட்டிய மனைவியை விட நினைவெல்லாம் இந்தப்பெண்ணின் மீதே இருப்பதாக கூறி  அங்கிருந்தபடி தொலைபேசியிலேயே கள்ளத்தொடர்பை  தொடர்ந்துள்ளார். தொடர்ந்து அந்தப்பெண்ணை நச்சரித்த   ராஜ்குமார் அந்த பெண்ணுடன் சேர்ந்து வாழ  விரும்புவதாக ஆசை வார்த்தைகளை கூறி கணவரை விட்டு பிரிந்து வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்கு அந்தப் பெண் என் கணவனை விட்டுட்டு  பிரிந்து முடியாது என மறுத்துள்ளார். 'அப்போ என்னுடைய காதல் உனக்கு புளிச்சிப்போச்சா, உன்ன சும்மா விடமாட்டேன் ' நீ வரவில்லை என்றால் உன்னை சும்மா விடமாட்டேன்' அப்டினா நீ என்னுடன் பேசிய ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்கள்  என்னிடம் உள்ளது. அதை உனது கணவருக்கு அனுப்பி விடுவேன் எனக் கூறி மிரட்டியுள்ளார். 

தனியாக வசிக்கும் பெண்ணை உடலுறவுக்கு அழைத்த இளைஞர் தனது மனைவி உடன் கைது

அவரின் மிரட்டலுக்கு பயந்த  அந்தப் பெண் அவ்வாறு செய்யாதீர்கள் என் வாழ்க்கை கெட்டு விடும் என கெஞ்சியுள்ளார். அதை சாதமாக பயன்படுத்திக் கொண்ட ராஜ்குமார் மீண்டும் அந்தப் பெண்ணிடம் உன்னை நிர்வாணமாக பார்ப்பதற்கு எனக்கு ஆசையாக உள்ளது. ஆகவே நீ நிர்வாணமாக எனக்கு வீடியோ கால் செய்ய வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். ஆனால் அந்தப் பெண் முடியாது என மறுத்துள்ளார். உடனே ராஜ்குமார் அந்தப் பெண்ணிடம் நீ செய்யவில்லை என்றால் நீ என்னோடு பேசிய வீடியோ மற்றும் ஆடியோகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அசிங்கப்படுத்துவது என கூறி மிரட்டியுள்ளார். அதற்கு அந்தப் பெண் பயந்து போய் நிர்வாணமாக இருந்து போட்டோ மற்றும் வீடியோ எடுத்து ராஜ்குமாருக்கு அனுப்பியும் வைத்துள்ளார். அதோடு நிற்கவில்லை ராஜ்குமாரின் ஆட்டம்.

அதை பார்த்த ராஜ்குமார், உன்னை பார்ப்பதற்காகத்தான் ஊருக்கு வருகிறேன். அதனால் அந்த பெண்ணை உடலுறவுக்கு வரவேண்டும் என அழைத்துள்ளார். உடனே அந்தப் பெண் அதிர்ந்துபோய் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். நீ உடலுறவுக்கு வரவில்லை என்றால் உன் போட்டோ மற்றும் வீடியோக்களை நெட்டில் பரப்பி விடுவேன் என ராஜ்குமார் மீண்டும், மீண்டும், மிரட்டியுள்ளார். உடனே அந்தப் பெண் ராஜ்குமாரிடம் கெஞ்சி கூத்தாடியுள்ளார். அதற்கு அவர் உனது வீடியோ மற்றும் படங்கள் சமூக வலைதளங்களில் விடாமல் இருக்க என்னோடு உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நீ எனக்கு 10 லட்சம் தரவேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு உடந்தையாக ராஜ்குமாரின் மனைவி ஆனந்தி (26) ராஜ்குமாரின் அண்ணன் சிவா (31) ஆகியோரும் இருந்துள்ளனர். உடனே இதிலிருந்து மீள முடியாத அந்தப் பெண் வேறு வழியின்றி நடந்த விபரங்கள் அனைத்தையும் அவர்களது உறவினர்களிடம் கூறியுள்ளார். உடனே அவர்கள் இதுகுறித்து பரமக்குடியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடிவு செய்து அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு சென்றுபுகார் கொடுத்தனர்.

தனியாக வசிக்கும் பெண்ணை உடலுறவுக்கு அழைத்த இளைஞர் தனது மனைவி உடன் கைது

அந்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி, ராஜ்குமார் அவரது மனைவி ஆனந்தி, ராஜ்குமாரின் சகோதரர் சிவா, ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளார். மேலும் அந்த செல்போனில் இருந்த வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தினர். அதன்படி ராஜ்குமாரின் உடன்பிறந்த  அண்ணன் சிவா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜ்குமாரின்  மனைவி ஆனந்தியை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கான கணவன் இருக்கும் பொழுது பிற ஆண்களுடன் ரகசிய தொடர்பு வைத்திருக்கும் இவர் போன்ற பெண்களுக்கு இந்த சம்பவம் ஒரு பாடமாக அமையட்டும்., குறிப்பாக மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று சொன்னதின் அர்த்தம் புரியாமல் காமம்  பிடித்த ஆண்கள் பிறர் மனைவிமீது ஆசை வைப்பதுடன் அவர்களின் பொருளாதாரத்தையும் அபகரிக்க நினைக்கும் இதுபோன்ற ஆண்களை சட்டத்தின் மூலம் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதையும் இந்த சம்பவம் உணர்த்துகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN Match Highlights: குல்தீப் யாதவ் மாயாஜால பந்து வீச்சு.. வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி!
IND vs BAN Match Highlights: குல்தீப் யாதவ் மாயாஜால பந்து வீச்சு.. வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி!
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN Match Highlights: குல்தீப் யாதவ் மாயாஜால பந்து வீச்சு.. வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி!
IND vs BAN Match Highlights: குல்தீப் யாதவ் மாயாஜால பந்து வீச்சு.. வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி!
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி
வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி
Madurai: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்; நீதி கேட்டு  ஆர்ப்பாட்டம்; கைதான எச்.ராஜா
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்; நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்; கைதான எச்.ராஜா
விழுப்புரத்தில் பரபரப்பு... விஷச்சாராயம் குடித்த இருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
விழுப்புரத்தில் பரபரப்பு... விஷச்சாராயம் குடித்த இருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
காப்பாற்ற முயற்சி செய்த கணவர்.. மாடியில் இருந்து விழுந்த பெண்.. கர்நாடகாவில் சோகம்!
காப்பாற்ற முயற்சி செய்த கணவர்.. மாடியில் இருந்து விழுந்த பெண்.. கர்நாடகாவில் சோகம்!
Embed widget