மேலும் அறிய

Crime: திருமணத்தை மீறிய உறவில் நிதிநிறுவன ஊழியர் படுகொலை - விசாரணையில் அதிர்ச்சி தகவல்

கம்பத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் நிதிநிறுவன அதிபர் படுகொலை செய்யப்பட்டார். முல்லைப்பெரியாற்றில் உடலை வீசிய கணவன், மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்

தேனி மாவட்டம் கம்பம் கூலத்தேவர் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (37). இவர், கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 21-ந்தேதி பணிக்கு சென்ற இவர், வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் அவரது உறவினர்கள் தேடியும் பிரகாஷ் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கம்பம் தெற்கு காவல் நிலையத்தில், அவருடைய மனைவி கனிமொழி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை தேடி வந்தனர். மேலும் அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர்.

Crime: திருமணத்தை மீறிய உறவில் நிதிநிறுவன ஊழியர் படுகொலை - விசாரணையில் அதிர்ச்சி தகவல்

அப்போது அவர், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வினோத்குமார் (34) மனைவி நித்யா (25) என்பவரிடம் மணிக்கணக்கில் பேசியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நித்யாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தனக்கும், பிரகாசுக்கும் கள்ளக்காதல் இருந்ததை ஒப்புக்கொண்டார். மேலும் இந்த கள்ளக்காதல் விவகாரத்தில் தனது கணவர் வினோத்குமார், பிரகாசை கொலை செய்ததாக தெரிவித்தார். இதனையடுத்து வினோத்குமாரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்ததாக நித்யா, கம்பம் என்.கே.பி கவுடர் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ் (31) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.


Crime: திருமணத்தை மீறிய உறவில் நிதிநிறுவன ஊழியர் படுகொலை - விசாரணையில் அதிர்ச்சி தகவல்

கைதான வினோத்குமார் காவல் நிலையத்தில் அளித்த வாக்குமூலத்தில் நிதி நிறுவனத்தில் வேலை செய்த பிரகாசிடம், என்னுடைய மனைவி நித்யா கடன் வாங்கியுள்ளார். இதனால் அவருக்கும், என்னுடைய மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அதேநேரத்தில் நானும், பிரகாசும் ஒன்றாக சேர்ந்து மதுபானம் குடிப்பது வழக்கம். போதை ஏறியதும் வீட்டுக்கு வந்து நான் உறங்கி விடுவேன். நான் தூங்கியவுடன் பிரகாஷ் என்னுடைய வீட்டுக்கு வந்து நித்யாவுடன் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளார். ஒரு நாள் அவர்கள் 2 பேரும் தனியாக இருந்ததை பிரகாஷ் தனது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். அதனை என்னுடைய மனைவியின் செல்போனுக்கும் அவர் அனுப்பியிருந்தார்.

இதுதொடர்பாக என்னுடைய மனைவியிடம் கேட்டு அவரை கண்டித்தேன். இதனையடுத்து எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இருப்பினும் அவர்களுக்கிடையான கள்ளத்தொடர்பு நீடித்தது. இது, எனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியது. எனவே பிரகாசை கொலை செய்ய முடிவு செய்தேன். இந்தநிலையில் வழக்கம் போல் கடந்த 21-ந்தேதி பிரகாசும், நானும் ஒன்றாக மது குடிக்க சென்றோம். எனக்கு அவர், மதுபானத்தை அதிகமாக ஊற்றிக்கொடுத்தார். சிறிது நேரத்தில் நான் வீட்டுக்கு சென்று விட்டேன். வீட்டின் ஒரு அறையில் தூங்குவதை போல நடித்தேன்.


Crime: திருமணத்தை மீறிய உறவில் நிதிநிறுவன ஊழியர் படுகொலை - விசாரணையில் அதிர்ச்சி தகவல்

அப்போது நித்யாவின் செல்போன் எண்ணுக்கு, நான் வீட்டுக்கு வரட்டுமா? என குறுந்தகவல் அனுப்பினார். அதற்கு நித்யா, வீட்டுக்கு வருமாறு குறுந்தகவல் அனுப்பினார். பிரகாசை எதிர்பார்த்து நான் காத்திருந்தேன். சிறிதுநேரத்தில் பிரகாஷ் என்னுடைய வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த நான் வைத்திருந்த கயிற்றால், பிரகாசின் கழுத்தை இறுக்கினேன். இதில் அவர் இறந்து விட்டார். அதன்பிறகு அவரது உடலை முல்லைப்பெரியாற்றில் வீச முடிவு செய்தேன். இதற்காக என்னுடைய நண்பரும், கம்பம் என்.கே.பி.கவுடர் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவருமான ரமேஷ் (31) என்பவரின் உதவியை நாடினேன். அவரும் வீட்டுக்கு வந்தார். அவரிடம் நடந்த விவரத்தை கூறினேன்.


Crime: திருமணத்தை மீறிய உறவில் நிதிநிறுவன ஊழியர் படுகொலை - விசாரணையில் அதிர்ச்சி தகவல்

இதனையடுத்து கொலை செய்யப்பட்ட பிரகாஷ் உடலை, ஆட்டோவில் ஏற்றி விட்டு ரமேஷ் அவரது வீட்டுக்கு சென்று விட்டார். நானும், நித்யாவும் பிரகாஷ் உடலுடன் சின்னமனூர் நோக்கி சென்றோம். பின்னர் உத்தமபாளையம் புதிய பைபாஸ் சாலையில் உள்ள முல்லைப்பெரியாற்றில் உடலை வீசி விட்டு வந்து விட்டோம். அதன்பிறகு எதுவும் தெரியாதது போல் இருந்தோம். ஆனால்  போலீசார் விசாரணையில் எங்களை கைது செய்து விட்டனர். இவ்வாறு வினோத்குமார் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசாா் தெரிவித்தனர். இதற்கிடையே முல்லைப்பெரியாற்றில் பிரகாசின் உடலை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் நிதிநிறுவன ஊழியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், கம்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

தலைப்பு செய்திகள்

நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
Ration Card : உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
Embed widget